தற்போது பாகிஸ்தான் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் சையும் அயூப் மற்றும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா இருவரும் ஒரே மாதிரியான பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை ரன் கணக்கை அபிஷேக் ஷர்மா தொடாமல் இருந்து வருகிறார். அதே சமயத்தில் சையும் அயூப் பெரிய ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இவர்கள் இருவருமே ஒரே திசையில் அடித்து விளையாட முயற்சி செய்து இந்த பிரச்சனைகள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என முகமது அமீர் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து முகமது அமீர் பேசும் பொழுது ” சையும் அயூப் பிஎஸ்எல் தொடருக்கு வந்த பொழுது அவருக்கும் இந்த பிரச்சனை இருந்தது. அவர் தொடர்ந்து லெக் சைடு மட்டுமே விளையாடினார். அதனால் அவருக்கு என்ன பலவீனம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் சிறந்த பவுலர்கள் அவரை சோதித்து வெளியில் பந்து வீசும் பொழுது அவரால் விளையாட முடியவில்லை. அவர் ஆப் சைடு விளையாட்டை மேம்படுத்திக் கொள்ளாவிட்டால் மாட்டிக் கொள்வார்”
“அபிஷேக் ஷர்மாவுக்கும் இப்படி ஆன பிரச்சனைகள் மட்டுமே இருக்கிறது. அவர் எல்லா பந்தும் ஸ்லாட்டில் இருக்க வேண்டும் அடிக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அப்படி பந்துவீச்சாளர்கள் நமக்கு கொடுக்க மாட்டார்கள். குறிப்பாக சர்வதேச கிரிக்கெட் ஒரு வீரரின் பலவீனத்தை வெளியில் கொண்டு வந்து விடும்” என்று கூறியிருக்கிறார்.

