சத்தியம் பண்ணி தரேன்.. இஷான் கிஷானை பேட்டிங் வரிசையில இதுக்கு கீழ அனுப்ப மாட்டேன் – சூரியகுமார் உறுதி

நாளைக்கு இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அமெரிக்கா எனக்கு எதிராக மும்பையில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் இஷான் கிஷான் எந்த இடத்தில் விளையாடுவார் என்பது குறித்து இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.

- Advertisement -

டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் அபிஷேக் ஷர்மா உடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக இஷான் கிஷான் களம் இறங்கினார். மேலும் அந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக இஷான் கிஷான் உலகக் கோப்பை தொடரில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இது குறித்த பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதில் அளித்த சூரியகுமார் யாதவ் கூறும்பொழுது ” கடைசியாக அவர் 5 டி20 போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடி இருந்தார். சர்வதேச டி20 போட்டியில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார். மேலும் சையத் முஸ்டாக் அலி தொடரில் இதேபோல மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார். அந்த ஆட்டத்தை அவர் அப்படியே இங்கும் கொண்டு வந்தார். இப்படி அவர் முதல் மூன்று இடங்களில் மட்டுமே விளையாடி இருக்கிறார். எனவே அவர் முதல் மூன்று இடங்களில் மட்டுமே விளையாடுவார். வேறு எங்கும் அவரை விளையாட வைக்க அனுப்ப மாட்டோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles