நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் அபிஷேக் ஷர்மா இன்னும் ரன் ஏதும் எடுக்கவில்லை. அவர் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் டக் அவுட் ஆகி இருக்கிறார். அதே சமயத்தில் இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் இஷா
ன் கிஷான் மிகவும் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு போட்டியை தனி வீரராக வென்று கொடுத்து வருகிறார். தற்போது அபிஷேக் ஷர்மா பேட்டிங் இந்திய அணிக்கு கொஞ்சம் கவலை தரக்கூடிய விஷயமாக மாறி இருக்கிறது.
தற்போது அபிஷேக் ஷர்மாவுக்கு எதிரணிகள் தனித்திட்டங்களை உருவாக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவரால் ரன்கள் எடுக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை இது தொடர்ந்தால் அவர் தனது ஆட்டத்தை மாற்றி அமைக்க வேண்டிய நிலை வரலாம். இந்த சூழ்நிலையில் அபிஷேக் ஷர்மாவுக்கு எதிரணிகள் தனித்திட்டங்களை கொண்டு வருவது குறித்து இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிடான்சு கோடக்கிடம் கேள்வி முன் வைக்கப்பட்டது. அவர் இதற்கு பதில் அளித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும்போது “எதிரணிகள் அபிஷேக் ஷர்மாவுக்கு தனித்திட்டங்களை கொண்டு வந்து ஆட்டம் இழக்க செய்தால் அது எங்களுக்கு சந்தோசமான விஷயம்தான். ஏனென்றால் இதுவரையில் அவர் மிகச் சிறப்பாக எதிரணிகளை சோதித்து விளையாடியிருக்கிறார் என்று அர்த்தம் ஆகிறது. உண்மையில் நாங்களும் அவருக்கு சில திட்டங்களை கொடுக்கிறோம். அவரும் தனியாக திட்டங்களை வைத்திருக்கிறார். மேலும் எதிரணிகள் அவர் குறித்து இவ்வளவு கவலைப்படுவது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி. அவருக்கு இது பெரிய பாராட்டு. அவர் பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். சீக்கிரம் ரன்கள் எடுப்பார் என்று கூறியிருக்கிறார்.

