எங்களுக்கு டாஸ் எல்லாம் ஒரு மேட்டரே இல்லைங்க.. இலங்கை அணியை ஜெயிக்க எங்க பசங்க கிட்ட நான் இதைத்தான் சொன்னேன் – ஜிம்பாப்வே கேப்டன் பேட்டி

நடப்பு இப்ப t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணி சிறப்பாக விளையாடி அனைத்து போட்டியிடிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. கடந்த டி20 உலக கோப்பை தொடரில் கூட இடம்பெறாத ஜிம்பாப்வே இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறது. அதேபோல கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணியும் வீழ்த்தி தனது பிரிவில் முதல் இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

- Advertisement -

நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 178 ரன்கள் குவிக்க, தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 182 ரன்கள் குவித்து 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. இதில் அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 26 பந்துகளில் 45 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் டி20 உலக கோப்பை பயணம் குறித்து அவர் கூறியதாவது “நாங்கள் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் டாசை தோற்றோம். அப்போது நான் என் அணியிடம் சென்று சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் நமக்கு டாஸ் ஒருபோதும் தேவை கிடையாது. எனவே முதலில் சிறப்பாக பந்து வீசி இரண்டாவது ஆக இலங்கை அணியை வெல்லலாம் என்று கூறினேன். அதேபோல அவர்கள் விளையாடி 178 ரன்கள் குவித்தார்கள். இந்த மைதானத்தில் இந்த ரன்கள் அதிகம் தான். அப்போது நான் எனது வீரர்களை அழைத்து இலங்கை அணி 10 ரன்கள் குறைவாக எடுத்திருக்கிறது எனவே நாம் வெற்றி பெற முடியும் என்று கூறினேன். எனவே நாங்கள் ஒரு அணியாக இந்த போட்டியை வெற்றி பெற்றிருக்கிறோம். அடுத்த சுற்றில் மூன்று ஆட்டங்கள் உள்ளன அதில் என்ன நடக்கிறது என்று யாருக்கு தெரியும்” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles