இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி தங்களது சொந்த மண்ணில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மோதியது. இரண்டு அணிகளும் ஏற்கனவே இரண்டாவது சுற்று தகுதி பெற்று விட்டதால் இந்த போட்டிக்கு பெரிய முக்கியத்துவம் எதுவும் இல்லை. அதே சமயத்தில் வென்று நம்பிக்கையுடன் இரண்டாவது சுற்றுக்கு செல்ல இரண்டு அணிகளும் முயற்சி செய்தன. ஆனால் இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி மிகச் சிறப்பாக விளையாடி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் என்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி தொடக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக பவன் ரத்னாயகே 25 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். இறுதியாக இலங்கையணி 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது.
இதைத்தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பென்னட் 48 பந்துகளில் 63 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாட வேண்டிய நெருக்கடிகள் வந்த கேப்டன் சிக்கந்தர் ராஸா சிறப்பாக விளையாடி 26 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஜிம்பாப்வே அணி வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். அந்த அணி 19.3 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணி இதுவரையில் தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

