அழுத்தம்னு சும்மா சாக்கு சொல்லாதீங்க சாம்சன்.. 12 வருஷம் விளையாடிட்டீங்க அத முதல்ல மனசுல வச்சுக்கோங்க – சஹால் தாக்கு

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில் அதற்கு பிறகு டி20 உலக கோப்பை தொடரில் விளையாட உள்ளது. இதற்கான பதினைந்து பேர் கொண்ட அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிறப்பாக விளையாடி வரும் நிலையில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் நியூசிலாந்து அணி தொடரில் மோசமாக விளையாடி வருகிறார். இதனால் அவரது இடத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக இடது கை ஆட்டக்காரர் இசான் கிஷன் விளையாடுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இது குறித்து ஸ்பின் பவுலர் யுஸ்வேந்திரா சஹால் கூறும்போது “சஞ்சு சாம்சன் பல வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் மிடில் ஆர்டரில் விளையாட ஆரம்பித்து மொத்தமாக சுமார் 12 வருடம் கிரிக்கெட் விளையாடிவிட்டார். எனவே அழுத்தத்தை சாக்காக சொல்ல முடியாது. நான்கு போட்டிகளிலும் அவர் தன்னை நிரூபிக்க தவறி இருக்கிறார். ஒரு போட்டி என்றால் பரவாயில்லை.

- Advertisement -

அதனால் இதனை ஏற்க முடியாது எனவே அவருடைய இடத்திற்கு இஷான் கிஷன் காத்துக் கொண்டிருக்கிறார். மேலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை என்று தன்னைத்தானே அவர் குற்றம் சுமத்திக் கொள்வார். எனவே இப்போது அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles