தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவி அபிஷேக் சர்மாவுக்கு கொடுக்கப்படாமல் இஷான் கிஷானுக்கு கொடுக்கப்பட்டதால் தான் ஏமாற்றம் அடைந்தேன் என யுவராஜ் சிங் கூறியிருக்கிறார்.
மேலும் இந்திய அணிக்கு தான் கேப்டன் ஆக வேண்டிய நேரத்தில் திடீரென மகேந்திர சிங் தோனியை கேப்டன் ஆக்கியது போல இது நடந்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து யுவராஜ் சிங் பேசும்பொழுது “இஷான் கிஷானை எனக்கு பிடிக்கும். இந்திய கிரிக்கெட்டில் அவரது வளர்ச்சியை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அபிஷேக் சர்மாவுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்படாததால் நான் ஏமாற்றம் அடைந்தேன். ஒரு வீரரின் கண்ணோட்டத்தில் இது ஏமாற்றம் ஆகவே இருக்கும்”
“அபிஷேக் ஷர்மா ஹைதராபாத் அணிக்காக ஏழு வருடங்கள் விளையாடி தற்போது இந்திய அணிக்கு உலகக் கோப்பையையும் வென்றிருக்கிறார். நான் இந்திய அணிக்கு துணை கேப்டனாக இருந்த பொழுது திடீரென தோனியை கேப்டனாக கொண்டு வந்தார்கள். அது ஒரு வீரரின் கண்ணோட்டத்தில் தெரிய ஏமாற்றத்தை கொடுக்கும்” என்று கூறியிருக்கிறார்.

