கலக்கிட்ட சிஷ்யா.. அபிஷேக் ஸார் நீ விமர்சனத்துக்கு பதில் சொல்ல வேண்டிய முறை இதுதான் – யுவராஜ் சிங் பதிவு

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அபிஷேக் ஷர்மா தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து மோசமான சாதனையை படைத்தார். இது தனிப்பட்ட முறையில் அவருக்கு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி, இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறை மீது பெரிய சந்தேகத்தை உருவாக்கியது. இதன் காரணமாக வெளியில் இருந்து நிறைய விமர்சனங்கள் கம்பீர் மீது உருவாகியது.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று அபிஷேக் ஷர்மா ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமை காட்டி ஆரம்பித்தார். பிறகு அதிரடியாக அவரது பாணியில் விளையாட தொடங்கினார். இதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் வெறும் 30 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் நேற்று நல்ல துவக்கத்தை கொடுத்ததால் இந்திய அணி 256 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இந்த நிலையில் கிரிக்கெட்டில் அபிஷேக் ஷர்மாவுக்கு குருவாக இருந்து வரும் யுவராஜ் சிங் இது குறித்து பாராட்டி பேசும்பொழுது ” எல்லாவிதமான விமர்சனங்களுக்கும் பேட்டால் பதிலடி கொடுப்பதுதான் சிறந்த உரையாடலாக இருக்க முடியும் அபிஷேக் சார். நீங்கள் சிறப்பான முறையில் விளையாடியுள்ளீர்கள்” என்று பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles