அபிஷேக் ஷர்மாவும் நானும் ஒன்று கிடையாது.. நீங்க நினைக்கிற மாதிரி அவர் என் சாதனையை எல்லாம் முறியடிக்கல – யுவராஜ் சிங் பேட்டி

இந்திய டி20 அணியில் அதிரடி துவக்க ஆட்டக்காரராக விளையாடி வருபவர் அபிஷேக் ஷர்மா. இவர் t20 கிரிக்கெட்டில் அதிரடியான சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். இவருக்கு இந்திய முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஆன யுவராஜ் சிங் குருநாதராக இருந்து இந்திய அணிக்குள் அபிஷேக் ஷர்மா நுழைவதற்கான அனைத்து வழிகாட்டுதல்களையும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து யுவராஜ் சிங் பேசும்போது ” அபிஷேக் ஷர்மா என்னுடைய பெரிய சாதனைகளை முறியடிக்கவில்லை. அவர் ஒரு சாதனையை முறியடித்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 29 பந்தில் அரை சதம் அடித்திருந்தேன் அவர் 23 வந்தில் அரை சதம் அடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் துவக்க ஆட்டக்காரர் நான் மிடில் வரிசை பேட்ஸ்மேன். நான் விளையாடும் போது ஃபீல்டிங் வெளியே இருக்கும்.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் நான் என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுதலுக்கு ஆட்கள் கிடையாது. ஆனால் மூத்த சீனியர் வீரர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். அதே சமயம் சச்சின் எனக்கு என்ன மாதிரியான அறிவுரை வழங்குகிறார் என்று புரிந்து கொள்ள நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. கில் புத்திசாலியான வீரர் மற்றும் கடின உழைப்பாளி. அவர் தனக்கென்று பணி நெறிமுறைகளை கொண்டிருந்தார். ஆனால் அபிஷேக் சர்மாவை இந்த இடத்திற்குள் வரவழைக்க சிறிது வேலை செய்ய வேண்டி இருந்தது. நான் அபிஷேக் ஷர்மாவை ஐபிஎல் விளையாட வைப்பதற்காக ஊக்குவிக்கவில்லை. இந்திய அணிக்குள் விளையாடவே அவரை ஊக்குவித்தேன். அது சரியாக நடந்திருக்கிறது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles