இந்தியா கூட தோற்க நீ தான் காரணம்.. மருமகன் என்றும் பாராமல் வெளுத்து வாங்கிய ஷாஹித் அப்ரிடி.!

மிகுந்த பரபரப்புகளுக்கு இடையே நடைபெற்ற இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இது இந்தியா பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெற்ற அதிகபட்ச வெற்றியாகும்.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 356 ரன்களுக்கு இரண்டு விக்கெட்களை மட்டுமே இழந்தது. விராட் கோலி 122 ரன்களும் கேஎல் ராகுல் 111 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதனைத் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

பந்து வீச்சிக்கு பேர் போன பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் அதிகமான ரன்களை இந்திய அணிக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதிலும் முதல் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாஹின் ஷா அப்ரிதி பத்து ஓவர்களில் 79 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருந்தார். இந்திய அணிக்கு எதிராக அவர் மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்த அளவில் பந்து வீசாதது ரசிகர்கள் மற்றும் முன்னால் வீரர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி வீரருமான ஷாகித் அப்ரிதி இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி பற்றியும் தனது மருமகனான ஷாஹின் ஷா அப்ரிதியின் பந்துவீச்சு குறித்தும் விமர்சனம் செய்திருக்கிறார். இது தொடர்பாக பாகிஸ்தான் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் அவர் ஷாஹீன் ஷா அப்ரிதி சரியாகப் பந்துவீசி இருந்தால் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் ஏற்பட்டிருக்காது என தெரிவித்தார்.

இதுகுறித்து விரிவாக பேசிய ஷாகித் அப்ரிதி ” அதிகமான விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் பாகிஸ்தான் அணி பந்திவீச்சை தேர்வு செய்ததை விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை அது ஒரு நல்ல திட்டமாகவே நான் பார்த்தேன். எனினும் பாகிஸ்தான் அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசி இருக்க வேண்டும். ஷாகின் அப்ரிதி துவக்கத்திலேயே அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார் அவரும் நசிம் ஷா வீசியது போல் கட்டுப்பாட்டுடன் வீசி இருந்தால் நிச்சயமாக இந்திய அணி வீரர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும்” என தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் இது தொடர்பாக தொடர்ந்து பேசிய அவர் ” ஷாகின் அப்ரிதி திறமையான பந்துவீச்சாளர் அவர் முதலில் வீசும் இரண்டு ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து போட்டிகளிலும் அவர் மீது இருக்கிறது. இதன் காரணமாக ஒரு சில போட்டிகளில் அவருக்கு துவக்கத்தில் விக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்றால் அதன் பிறகு அவரது லைன் அண்ட் லென்த் சரியாக அமைவதில்லை. இதன் காரணமாக அதிக ரன்கள் வழங்கக்கூடிய பந்துவீச்சாளராக மாறுகிறார். இதனை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

ஒரு சில ஓவர்கள் சரியாக அமையவில்லை என்றால் வேறு சில லைன் மற்றும் லென்த்தில் பந்து வீச வேண்டும் அதை விட்டுவிட்டு முதலில் செய்த தவறுக்காக வருத்தப்பட்டு கொண்டே இருக்கக் கூடாது என தனது மருமகனான ஷாஹீன் அப்ரிதிக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார் ஷாஹித் அப்ரிதி.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles