அஸ்வின் உனக்கு முதல்ல என்ன தெரியும்னு.. நீ அர்ஜுனை குறை சொல்ற.. பேசணும்னு ஏதாவது உளறாதே.. அஸ்வினை தாக்கிய யுவராஜ் சிங் தந்தை

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆனது இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இந்த முறை லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியால் வாங்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் அவர் இந்த அணியிலும் அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்த நிலையில் அது குறித்து யுவராஜ் சிங்கின் தந்தையான யோகராஜ் சிங் அஸ்வினை தாக்கிப் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “இந்த அஸ்வின் யாராக இருந்தாலும் சரி, அவன் தற்போது உளறுகிறான். ஒருவரைப் பற்றி நாம் பேசும்போது என்ன பேசுகிறோம் என்பது குறித்து கவனம் வைத்திருக்க வேண்டும். ஒரு தொலைக்காட்சியில் அமர்ந்து உங்களால் இதை செய்ய முடியாது அதை செய்ய முடியாது என்று பேசிக் கொண்டிருக்கிறார் முதலில் ஒருவர் குறித்து கருத்து கூற நீங்கள் யார்? அர்ஜுன் டெண்டுல்கர் முதலில் பந்து வீச்சாளர் கிடையாது என்று ஏற்கனவே நான் யுவராஜ் சங்கடம் கூறி இருக்கிறேன். முதலில் அவரது முதுகு 45 டிகிரி வளைகின்ற காரணத்தால் இது முடியாது.

- Advertisement -

மேலும் கோவா அணிக்காக அவர் விளையாடும் போதும் அந்த பயிற்சியாளரிடம் இவர் குறித்து கூறியிருக்கிறேன். உங்களால் முடியவில்லை என்றால் அவரை என்னிடம் அனுப்புங்கள். ஆறு மாத காலத்தில் அவரை சிறந்த பேட்ஸ்மேன் ஆக நான் உருவாக்கி காட்டுகிறேன். அப்போது அவர் எல்லா பேட்ஸ்மேன்களையும் மிஞ்சி உலக அளவில் சிறந்த தொழில்நுட்பம் கொண்ட வீரராக இருப்பார்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles