பிரேம்ஜி பரவால போலயே.. 4வது கேட்சை கோட்டைவிட்ட ஜெய்ஸ்வால்.. இங்கிலாந்து ஆதிக்கம்.. கடுப்பான சிராஜ்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணி வெற்றிக்கு 371 ரன்கள் தேவையாக இருந்தது. இதன்பின் இங்கிலாந்து அணியின் கிராலி – பென் டக்கெட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இவர்கள், விரைவாக ரன்களை உயர்த்தினர்.

- Advertisement -

சொதப்பிய ஜெய்ஸ்வால்

பும்ரா, சிராஜ், ஜடேஜா என்று யார் அட்டாக் செய்தாலும், அவர்களை எளிதாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர். இருவருமே அரைசதம் கடந்த நிலையில், பார்ட்னர்ஷிப் 167 ரன்களாக உயர்ந்தது. அப்போது சிராஜ் வீசிய ஓவரில் பென் டக்கெட் சதம் விளாசுவதற்காக 97 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

- Advertisement -

அப்போது சிராஜ் பந்தில் பென் டக்கெட் தூக்கி அடிக்க, அந்த பந்து ஜெய்ஸ்வாலின் கைகளுக்கு சென்றது. அவரும் ஓடி வந்து பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, மீண்டும் கோட்டைவிட்டார். இந்த டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் கோட்டைவிடும் 4வது கேட்ச் இதுவாகும். முதல் இன்னிங்சில் மட்டும் 3 கேட்ச்களை கோட்டைவிட்டிருந்தார்.

- Advertisement -

4வது கேட்ச் மிஸ்

இதனை 2வது இன்னிங்சில் சரி செய்துவிடுவார் என்று நம்பிக்கையோடு ரசிகர்கள் இருந்தனர். ஆனால் ஜெய்ஸ்வால் மீண்டும் சொதப்பி இருக்கிறார். முதலில் ஸ்லிப் திசையில் கேட்சை கோட்டைவிட்டார். பின் பாய்ண்ட் திசையில் கேட்சை கோட்டைவிட்டார். தற்போது பவுண்டரி லைனில் கேட்சை கோட்டைவிட்டிருக்கிறார். எங்கு நிறுத்தினாலும் கேட்ச் மட்டும் மிஸ்ஸாகி கொண்டே இருக்கிறது.

சென்னை 28 முதல் பாகத்தில் பிரேம்ஜி-க்கு கேட்ச் பிடிக்கவே தெரியாது. அவருக்கு எவ்வளவு எளிதாக கேட்ச் கொடுத்தாலும் கோட்டைவிட்டுவிடுவார். ஆனால் அவர் கூட கடைசியில் ஒரு கேட்சை தெரியாமல் பிடித்துவிடுவார். ஆனால் ஜெய்ஸ்வால் இந்த போட்டியில் ஒரு கேட்சை கூட ஒழுங்காக பிடிக்காதது இந்திய ரசிகர்களிடையே கடுமையான கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles