நியூசிலாந்து டெஸ்ட்டை 3-0 என ஜெயிக்க முடியலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல மறந்துட வேண்டியது தான்.. இந்த 2 டீம் இந்தியாவுக்கு முட்டுக் கட்டா நிக்குறாங்க

இந்தியா – நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று துவங்கியது. முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த நிலையில் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

- Advertisement -

இரு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் உலக டெஸ்ட் பைனல் அடுத்ததாக 2025 ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்கவுள்ளது. இதுவரை இரண்டு முறை நடந்த இறுதிப் போட்டிகளிலும் இந்தியா மண்ணைக் கவ்வி கோப்பையை இழந்துள்ளது. 2021ல் கேன் வில்லியம்சனின் நியூசிலாந்து அணியும், 2023ல் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் கோப்பைகளை வென்றுள்ளனர்.

- Advertisement -

தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் பந்தையத்தில் இந்தியா ஓடிக் கொண்டுள்ளது. புள்ளிப் பட்டியலில் இந்தியா இதுவரை 11 போட்டிகளில் 8 வெற்றிகள், 2 தோல்விகள், 1 டிராவிடன் 74% பெற்று முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் 62.5% எடுத்து ஆஸ்திரேலியா உள்ளது. இந்திய அணியின் இந்த முதலிடம் நிரந்தரம் இல்லை. தற்போது நடந்துக் கொண்டிருக்கும் நியூசிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் மிக முக்கியமாக டிசம்பர் மாதம் நடக்கும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தான் இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்யும்.

- Advertisement -

முதல் 2 இடங்களுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா தவிர இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இலங்கை அணி ஆடப்போகும் அடுத்த 6 டெஸ்ட்டில் 4 போட்டிகள் சொந்த ஊரில். அந்த நான்கையும் சென்றுவிட்டு வெளிநாட்டு டெஸ்ட்டில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக ஒரு போட்டியில் வென்றால் கூட போதும் என்ற நிலை.

இலங்கையை விட தென்னாபிரிக்கா அணிக்கு தான் மிகவும் சுலபம். எஞ்சி இருக்கும் 6 போட்டிகளில் இலங்கைக்கு எதிராக 2, பாகிஸ்தானுக்கு எதிராக 2 ஆகியவை சொந்த மைதானங்களில் விளையாடவுள்ளது. மீதம் இருக்கும் 2 வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகள் வங்கதேச அணிக்கு எதிராக. 6 போட்டிகளையும் வென்று எளிதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழையும் திறன் தென்னாபிரிக்கா அணி கைவசம் உள்ளது.

- Advertisement -

ஒரு வேளை இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளில் எதேனும் ஒரு அணி முதல் 2 இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டு, மீதம் இருக்கும் ஒரு இடம் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுக்கு என்ற நிலை உண்டானால் அதை தீர்மானிப்பது பார்டர் கவாஸ்கர் டிராபியாக இருக்கும். அதனை சமாளிக்க இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 – 0 என வென்றுவிட்டால் ஆஸ்திரேலியா டெஸ்ட்டில் 1/2 வெற்றிகள் மற்றும் ஓரிரு போட்டிகளில் டிரா செய்தாலே போதும். கம்பீர் & ரோஹித் தலைமையிலான இந்தியா சொந்த ஊரில் நியூசிலாந்து அணியை வென்று முதல் இடத்தை தக்க வைப்பது நல்லது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles