டெஸ்ட் வரலாற்றிலேயே இப்படி யாருமில்லை.. பும்ராவின் டி20 எகனாமியை டெஸ்டில் வைத்திருக்கிறார் பிரசித் கிருஷ்ணா.. கடுப்பான இர்பான் பதான்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. 371 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்த போதும், இந்திய அணி பவுலர்களால் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் இந்திய அணி பவுலர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இர்பான் பதான் விமர்சனம்

குறிப்பாக பிரசித் கிருஷ்ணாவின் பவுலிங் மோசமாக இருந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் முதல் இன்னிங்சில் 20 ஓவர்களில் 129 ரன்களையும், 2வது இன்னிங்சில் 15 ஓவர்களில் 92 ரன்களையும் விட்டுக் கொடுத்திருக்கிறார். அதானது பிரசித் கிருஷ்ணாவின் பவுலிங் எகனாமி 6க்கும் அதிகமாக இருக்கிறது. இதனால் பும்ரா, சிராஜ் இருவரையும் எளிதாக எதிர்கொண்டனர்.

- Advertisement -

இதுபற்றி முன்னாள் வீரர் இர்பான் பதான் பேசும் போது, 2 இன்னிங்சிலும் சேர்த்து எகனாமியை ஒப்பிட்டு பாருங்கள். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மோசமான எகனாமி வைத்துள்ள வீரராக பிரசித் கிருஷ்ணா இருக்கிறார். பும்ராவுக்கு டி20 கிரிக்கெட்டில் தான் 6 ரன்கள் என்ற எகனாமி இருக்கிறது. அதனால் பிரசித் கிருஷ்ணா ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக் கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

- Advertisement -

பிரசித் கிருஷ்ணாவின் பவுலிங்

அவரிடம் நல்ல உயரமும், வேகமும் இருக்கிறது. அதனால் இனி வரும் காலங்களில் பிரசித் கிருஷ்ணா கன்சிஸ்டன்சியுடன் பவுலிங் செய்வது எப்படி என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அட்வைஸ் கொடுத்துள்ளார். பிரசித் கிருஷ்ணா ஏற்கனவே தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களிலேயே இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார்.

இருந்தாலும் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட் லைன் மற்றும் லெந்திற்கு தயார்படுத்தி கொள்ள முடியவில்லை. அதேபோல் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் திட்டத்தில் இருந்து விலக மாட்டோம் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். அதேபோல் பும்ராவும் அதிக போட்டிகளில் விளையாட முடியாது என்பதால், பிரசித் கிருஷ்ணா மற்றும் சிராஜ் ஆகியோரை நம்பியே இந்திய அணி இருக்கிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles