சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் – வங்கதேசம் டெஸ்ட் தொடர் பெரிய பேச்சுப் பொருளாக வலம் வருகிறது. சொந்த நாட்டிலேயே பாகிஸ்தான் அணி மண்ணைக் கவ்வ வங்கதேசம் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது. இதனை சமூக வலைத்தளத்தில் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஒரு குத்து குத்தியுள்ளது.
ஆகஸ்ட் 21ஆம் தேதி துவங்கிய முதல் டெஸ்ட்டில் இரு அணிகளும் முதல் இன்னிங்சில் சரிக்கு சமமாக ஆடி வந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் சிறப்பாக பந்துவீசி அங்கேயே வெற்றியை உறுதி செய்தது. 14 முயற்சிகளில் இதுவே டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வங்கதேசம் பதிவு செய்யும் முதல் வெற்றி ஆகும்.
2001இல் டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற வங்கதேச அணி 24 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது, அதுவும் பாகிஸ்தான் மண்ணிலேயே. இந்த தோல்விக்குப் பிறகு தொடரை சமன் செய்யும் நோக்கில் பாகிஸ்தான் எண்ணியது. ஆகஸ்ட் 30 ஆரம்பித்த போட்டியில் முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து 272 ரன்கள் சேர்த்தது.
பின்னர் ஆடிய வங்கேச அணி 26 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து சிதைந்தது. அவ்வளவு தான் என நினைத்த போது வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் அபார சதம் என 138 ரன்களும் அவருக்கு துணையாக மெஹ்தி ஹசன் 78 ரன்களும் சேர்த்து அணியை மீட்டனர். இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 172 க்கு சுருண்டு போகா 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் எளிதாக வென்று வரலாற்று சாதனைப் படைத்தது.
பாகிஸ்தான் அணியின் இந்த தொடர் தோல்விகளைக் கண்டு, இது அணியின் பெரும் வீழ்ச்சியாக தொடருமோ என முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பயப்படுகிறார்கள். பாபர் அசாமின் சுதப்பலான ஆட்டம், பாகிஸ்தான் தோல்வியை சமூக வலைத்தளத்தில் கேலி செய்துக் கொண்டுள்ளார்கள்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சமூக வலைதலைப் பக்கத்திலும் அவர்களது பங்குக்கு ஒரு நக்கல் நகைச்சுவைப் பதிவைப் போட்டுள்ளார்கள். அவர்கள் பதிவிட்டதாவது, “ சொந்த மண்ணில் வெற்றி பெறுவது இந்த அணி காட்டியது போல் எளிது இல்லை. இந்த மாதம் மீண்டும் அவர்கள் வருகிறார்கள். ”
Winning at home isn't as easy as this team makes it look like 😌
— Royal Challengers Bengaluru (@RCBTweets) September 3, 2024
And they are back this month 😉 pic.twitter.com/Ij7jl8KHCh
சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய பாகிஸ்தானை கலாய்த்தும் இந்திய அணியைப் புகழ்ந்தும் இந்தப் பதிவையிட்டுள்ளனர். அடுத்து வங்கேசா அணியுடன் இந்தியா டெஸ்ட் தொடரில் மோத உள்ளது. விரைவில் அதற்கான அணி அறிவிப்பு வெளியாகும்.

