சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால்.. இந்திய டி20 அணியில் இடம்பிடிப்பார்களா? கம்பீர், அகர்கர் முடிவு என்னவாக இருக்கும்?

2026ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கவுள்ளது. அதற்கான பயணத்தை இந்திய அணி ஆசியக் கோப்பை தொடர் மூலமாக தொடங்கவுள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கும் ஆசியக் கோப்பை தொடரில் மொத்தமாக 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இதனால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

5 வீரர்கள் நிச்சயம்

இதனிடையே 15 பேர் கொண்ட இந்திய அணி நாளை தேர்வு செய்யப்பட உள்ளது. 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக மொத்தம் 20 வீரர்கள் போட்டியில் இருக்கின்றனர். அந்த வகையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் இடம் நிச்சயமாகி இருக்கிறது.

- Advertisement -

அதேபோல் பும்ராவும் விளையாட ஆர்வமாக இருப்பதாக கூறி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஸ்பின்னர்களாக வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. அதேபோல் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

- Advertisement -

யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

அதேபோல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய க்ருனால் பாண்டியா, ஹர்சித் ராணா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரின் இடம் உறுதியாகியுள்ள சூழலில், 2வது விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல், ஜித்தேஷ் சர்மா ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

அதேபோல் டாப் ஆர்டரில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா ஆகியோருக்கும் போட்டியில் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ஃபினிஷர்களான ரிங்கு சிங் மற்றும் சிவம் துபே ஆகிய இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல் தொடருக்கு பின் நடக்கவுள்ள டி20 தொடர் என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles