ரஹானேவை அணியை விட்டு நீக்க நினைக்கிறதா சென்னை அணி.. ! புதிய வீரர்கள் வருகை அவரின் இடத்தை காவு வாங்குமா ?

2024ம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் அண்மையில் நடைபெற்றது. சென்னை அணி ரச்சின் ரவிந்திரா, டாரில் மிட்செல், முஸ்டாபிசுர் ரஹ்மான் ஆகிய வெளிநாட்டு வீரர்களையும் உத்திர பிரதேச உள்ளூர் அதிரடி ஆட்டக்காரர் சமீர் ரிஸ்வியை எடுத்தது. இவர்கள் தான் சென்னை அணி வாங்கிய வீரர்களில் நட்சத்திரங்கள்.

- Advertisement -

அம்பாத்தி ராயுடு ஓய்வு பெற்ற நிலையில் அவரின் இடத்தைப் பூர்த்தி செய்ய ஓர் அதிரடி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவை. அதற்காக நியூசிலாந்து பேட்டிங் ஆல் ரவுண்டர் மிட்செலை 14 கோடிக்கு வாங்கியுள்ளது சென்னை அணி. ஆனால் அவர் மட்டுமே போதுமா எனக் கேட்டால் நிச்சயம் இல்லை.

- Advertisement -

சென்னை அணி கேப்டன் தோனிக்கு இதுவே கடைசி வருடம். அதனால் அவரின் இடமும் அடுத்த ஆண்டு காலி ஆகிவிடும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்காலத்திற்காக இளம் வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்க எண்ணுகிறது என நிர்வாகம் தரப்பில் இருந்து செய்திகள் வந்தன.

- Advertisement -

அந்தக் காரணத்தினால் தான் வலது கை சுரேஷ் ரெய்னா என அழைக்கப்படும் சமீர் ரிஸ்வி எனும் இளைஞரை 8.4 கோடிக்கு போராடி வாங்கியது. இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்பட்டுள்ளார் என்றால் நிச்சயம் அணியில் இருப்பதற்காக தான். உள்ளூர் போட்டிகளில் பெரிய ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியான சிக்ஸர்களை அடித்து தனக்குள் நிறைய திறன் இருப்பதை காட்டியுள்ளார். இவரை இளம் வயது முதலே சுரேஷ் ரெய்னா பார்த்தும் வருகிறார் என்பதால் நிச்சயம் வாய்ப்புக் கிடைக்கும்.

ஆனால் இவர் அணிக்குள் வந்து விளையாட வேண்டுமெனில் ரஹானே தன் இடத்தை அளிக்க வேண்டிய சூழல் உருவாக வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு ரஹானே 2.0 அணிக்கு பெரிய பக்க பலமாக இருந்தது. எப்போதும் மெதுவாக ஆடும் அவர் தன் வாழ்நாளிலேயே கடந்த ஆண்டு தான் மிகவும் அதிரடியாக ஆடினார். 2024ல் இன்னும் 5 சதவீதம் மேம்படுத்தவுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் இவர் இருப்பாரா இல்லையா என்பதே சற்று சந்தேகமாக உள்ளது.

- Advertisement -

காரணம் ரஹானே அணியில் இருந்தால் வெறும் 5 பந்து வீச்சாளர்கள் மட்டுமே அணியில் விளையாடும் நிலை ஏற்படும். அது சற்று ரிஸ்க்கான முடிவு என சென்னை அணி கேப்டன் தோனிக்கு தெரியும். ரஹானே அணியில் நீடிக்க அவர் தனது ஃபார்மை தக்க வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவன் இதுவாக இருக்க வாய்ப்புண்டு. ருத்துராஜ், கான்வே, மிட்செல், டூபே, சமீர் ரிஸ்வி, தோனி, ஜடேஜா, தீபக் சாஹர், தாக்கூர், தீக்ஷனா, பதிரானா. இம்பாக்கட் வீரராக 12வது இடத்தில், ஒரு ஸ்பின்னர் அல்லது வேகப் பந்து வீச்சாளர் இடம் பெறுவர். அவர்கள் சோலாங்கி அல்ல முகேஷ் இருவரில் ஒருவர் என கணிக்கப்படுகிறது. அவர்கள் இருவருமே இல்லையெனில் ரஹானேவே நீடிப்பார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles