அந்த ஒரு அம்பயர் எதிராகவே தீர்ப்பு அளிக்கிறார்.. எங்களுடன் ஏதும் விரோதம் இருக்கா? டேரன் ஷமி ஆவேசம்

வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பார்படாஸ் மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 180 ரன்களை சேர்த்தது.

- Advertisement -

டேரன் ஷமி ஆவேசம்

தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 190 ரன்காள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் 2வது நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன்களை எடுத்திருக்கிறது. இந்த போட்டியில் நடுவர் ஹோல்ட்ஸ்டாக் அளித்த முடிவுகள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பயிற்சியாளர் டேரன் ஷமி கடுமையாக நடுவர் ஹோல்டஸ்டாக்கை விமர்சித்துள்ளார்.

- Advertisement -

அதில் ஷாய் ஹோப் கொடுத்த கேட்சை அலெக்ஸ் கேரி பிடித்த போது, பந்து முன்பாகவே தரையில் உரசி இருந்தது. ஆனாலும் அவுட் கொடுக்கப்பட்டது. பின் டேரன் ஷமி பேசும் போது, நடுவர்களிடம் கொஞ்சம் கன்சிஸ்டன்சி இருக்க வேண்டும். அதனை மட்டுமே விரும்புகிறோம். ஏதாவது ஒரு குழப்பம் வந்தால், அனைத்து அணிகளுக்கும் ஒரே மாதிரியான முடிவு எடுக்கப்பட வேண்டும். 

- Advertisement -

நடுவர் மீது நம்பிக்கையில்லை

ஆனால் ஹோல்ட்ஸ்டாக் அப்படி எடுப்பதில்லை. இங்கிலாந்து மண்ணிலேயே இதனை கவனித்திருந்தார். ஒவ்வொரு டெஸ்ட் தொடரிலும் இது தொடர்வது விரக்தியை ஏற்படுத்துகிறது. சில நடுவர்களுக்கு எதிராக பேசுவது சரியாக இருக்காது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? ஏனென்றால் நடுவர் ஹோல்ட்ஸ்டாக் முடிவுகளை பார்க்கும் போது, அந்த கேள்வி இயல்பாகவே எழுகிறது.

இந்த நடுவர் தமக்கு எதிரானவர் என்ற குழப்பத்தோடு நாங்கள் விளையாட கூடாது. நடுவர் மீது நம்பிக்கை இல்லாமல் விளையாடினால், அது சரியாக இருக்காது. அதனால் ஒரு அணியாக எங்களுக்கு சில தெளிவுகள் வேண்டும். ஷாய் ஹோப் கேட்சிற்கு அவுட் கொடுக்கப்பட்டால், டிராவிஸ் ஹெட் கேட்சிற்கும் அவுட் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles