இந்தியா vs ஆஸ்திரேலியா.. நாளை தொடங்கும் டி20 கிரிக்கெட் தொடர்.. எந்த சேனல், ஓடிடியில் பார்க்கலாம்? முழு விவரம் இங்கே!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை தொடங்க உள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான  போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதனால் டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணியை பழிதீர்க்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

- Advertisement -

இந்தியா vs ஆஸ்திரேலியா

ஆசியக் கோப்பைத் தொடரை வென்ற குஷியில் இந்திய இளம் வீரர்கள் தயாராக இருக்கின்றனர். அதேபோல் இந்திய டி20 அணியும் வலிமையாகவே இருக்கிறது. பும்ரா, திலக் வர்மா உள்ளிட்டோர் அபாரமான ஃபார்மில் இருக்கின்றனர். ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை மிட்சல் மார்ஷ் தலைமையில் சிறப்பான அணி உருவாக்கப்பட்டுள்ளது. 

- Advertisement -

இந்தப் போட்டியை பொறுத்தவரை இந்திய நேரப்படி நாளை மதியம் 1.15 மணிக்கு டாஸ் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா நேரப்படி இரவு போட்டியாகவே நடக்க உள்ளது. அதன்பின் முதல் பந்து 1.45 மணிக்கு வீசப்பட உள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் மதிய உணவுக்கு பின் ஆட்டத்தை பார்க்க வசதியாக இருக்கும். 

- Advertisement -

எந்த சேனலில் நேரலை?

இந்த டி20 தொடர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் அத்தனை சேனல்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது. ஓடிடியை பொறுத்தவரை ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கான்பெரா மைதானத்தில் ஆட்டம் நடப்பதால், அதிகளவில் சிக்சர் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

சூர்யகுமார் யாதவ் மட்டும் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ஃபார்மில் இல்லாமல் இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் நல்ல பவுன்ஸ் கிடைக்கும் என்பதால், அவரின் பேட்டிங் எடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் கட்டாயம் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles