பாவம் சர்ப்ராஸ் கான்.. என்ன தவறு செய்துவிட்டார்? அவரின் பெயர்தான் தவறா.. முன்னாள் வீரர் சோகம்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இருந்து சுப்மன் கில் கேப்டனாக செயல்பட உள்ளார். கருண் நாயர், துருவ் ஜுரெல் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலும், இளம் வீரர் சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்படாதது கடுமையான விமர்சனத்தை பெற்றது.

- Advertisement -

இதன்பின் இந்தியா ஏ அணியில் சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்பட்டு இங்கிலாந்து புறப்பட்டார். பயிற்சி போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சர்ஃபராஸ் கான், இந்திய அணிக்கு இடையில் ஆடப்பட்ட போட்டியில் 76 பந்துகளில் 102 ரன்களை விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதனால் சர்ஃபராஸ் கான் நீக்கப்பட்டது ஏன் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

ஆகாஷ் சோப்ரா கேள்வி

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் போது, இந்திய அணியில் இருந்து நீக்கப்படும் அளவிற்கு சர்ஃபராஸ் கான் எந்த தப்பையும் செய்யவில்லை. கடந்த டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் 90 ரன்களுக்கு மேல் குவித்தார். சதம் அடிக்கவில்லை என்றாலும், சிறந்த ஸ்கோர் அது. ஆனால் அடுத்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இத்தனைக்கும் அவர் டெஸ்ட் அணியிலும் இல்லை.

- Advertisement -

அவரின் பேட்டிங் டெக்னிக் மீது நம்பிக்கையில்லை என்றால், அவரை ஏன் இந்திய ஏ அணிக்காக தேர்வு செய்கிறீர்கள். சர்ஃபராஸ் கான் தொடர்பான முன்பாகவே ஒரு முடிவை எடுத்த பின், எதற்காக அவருக்கு வாய்ப்பை அளிக்கிறீர்கள். இந்திய ஏ அணிக்காக சிறப்பாக ரன்களை சேர்த்த போதும், அதற்கான பலன் அவருக்கு கிடைப்பதில்லை. இந்திய ஏ அணிக்காக ரன்களை சேர்க்க முடியுமென்றால் இந்திய அணியிலும் தேர்வு செய்யலாம் அல்லவா..

பாவம் சர்ஃபராஸ் கான்

சர்ஃபராஸ் கான் என்ன தப்பு செய்துவிட்டார். நியூசிலாந்து அணிக்கு எதிரான பெங்களூர் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி 150 ரன்களை விளாசினார். அதன்பின் 2 போட்டிகளில் ரன்களை சேர்க்க முடியவில்லை. ஆனால் அந்த 2 போட்டிகளில் வேறு எந்த பேட்ஸ்மேனாவது ரன்களை சேர்த்தார்களா? ஆஸ்திரேலியா மண்ணில் அவர் ஒரு டெஸ்டில் கூட விளையாடவில்லை.

- Advertisement -

அவர் ஆஸ்திரேலியாவில் பிளேயிங் லெவன் திட்டத்தில் கூட இல்லை. சர்ஃபராஸ் கான் இதுவரை எந்த தவறையும் செய்யவில்லை. இந்திய அணியின் எதிர்கால திட்டத்திலும் இருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை உங்களின் பெயர் சர்ஃபராஸ் கானாக இருந்தால் சோகம்தான் என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles