ரிஷப் பந்த் சிஎஸ்கே வருவதாக கிளம்பிய செய்தி.. முதன் முதலாக மௌனம் கலைத்த சிஎஸ்கே சிஇஓ.. ருதுராஜின் கேப்டன்சி தொடருமா.?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025-க்கு முன்னதாக மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று பிசிசிஐ செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5, 2024) அறிவித்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து, லக்னோ அணியின் கேப்டனான கே.எல். ராகுல், டெல்கி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் மற்றும் கொல்கத்தா அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயரும் உரிமையாளர்களால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்கள் மூவரும் தங்களை தலா 2 கோடி விலை பிரிவில் பட்டியலிட்டுக் கொண்டனர்.

- Advertisement -

எனவே ரிஷப் பந்த் ஏலத்திற்கு வர உள்ளதால், மகேந்திரசிங் தோனிக்கு மாற்றாக ரிஷப் பந்தை கிரிக்கெட் கீப்பராக விளையாட வைக்க வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தைனிக் ஜாக்ரான் பத்திரிக்கை ஒன்றும் சென்னை அணியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்தை வாங்க விருப்பம் காட்டுவதாக அறிக்கை வெளியிட்டது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், சனிக்கிழமை, 2025 ஆண்டிற்கான மெகா ஏலத்தில் ரிஷப் பந்தை ஒப்பந்தம் செய்யும் சாத்தியக்கூறு பற்றிய வதந்திகளுக்கு முதல் பதிலளித்தார்.

காசி விஸ்வநாதன்:

சிஇஓ காசி விஸ்வநாதன் அவர்கள் கூறுகையில், “கேப்டன் ருதுராஜ், எம்எஸ் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் ஆகியோரிடம் நாங்கள் விவாதித்த பின்னரே தக்கவைப்பு வீரர்களே தீர்மானித்தோம். கடந்த ஆண்டுகளில் சிஎஸ்கே அணியின் வளர்ச்சிக்கு பங்களித்த வீரர்களே, முதலில் முக்கியம் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்”.

- Advertisement -

பட்ஜெட் குறைவாக உள்ளது:

மேலும் அவர் கூறியதாவது “வீரர்களை தக்க வைப்பது எங்களுக்கு மிகவும் எளிதாக அமைந்தது. ஏனென்றால், கெய்க்வாட், ஜட்டு, எம்.எஸ் தோனி, ஷிவம் துபே மற்றும் மதீஷா பத்திரனா ஆகிய ஐந்து வீரர்களை மட்டும் தக்க வைக்கவே, நாங்கள் முடிவு செய்தோம்.

எங்களுக்கு நன்றாக தெரியும், வீரர்களை தக்க வைப்பதே ஐபிஎல் ஏலத்தில் மிகவும் குறைந்த பட்ஜெட் என்று. நம்மிடம் குறைந்த பட்ஜெட்டே இருப்பதால், நமக்கும் மற்ற அணிகளுக்கும் இடையில், சிறந்த இந்திய வீரர்களுக்கான ஏலத்தில் நாங்கள் போட்டியிட முடியாது. நான் என்ன சொல்கிறேன் என்றால், நாங்கள் முயற்சி செய்வோம், ஆனால் ஏலத்தில் அவர்களை நாம் பெற முடியாது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறி முடித்தார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles