டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்ல நினைத்தாலும் இந்தியாவை தாண்டனும்.. அவங்க தான் இப்போ ராஜா – வெஸ்ட் இண்டீஸ் டேரன் சமி

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆனது தற்போது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக நடப்பு சாம்பியன் இந்திய கிரிக்கெட் அணி உள்ளது. அமெரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் கொஞ்சம் தடுமாறி இருந்தாலும் அடுத்தடுத்து வரும் போட்டிகளில் இந்த பிரச்சினைகளை இந்திய அணி நிச்சயம் சரி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி t20 கிரிக்கெட்டில் மிகவும் அசைக்க முடியாத அணியாக விளங்கி வருகிறது. அந்த அணியின் அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் என அதிரடி பேட்டிங் பட்டாளம் இந்திய அணியை தாங்கி நிற்கிறது. எனவே இந்த டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் இந்திய அணியை நிச்சயம் முதலில் தாண்ட வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் ஹெட் கோச் டேரன் சமி பேசியிருக்கிறார். இவரது தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு முறை சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்து டேரன் சமி பேசும்போது “டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்ல நினைத்தாலும் முதலில் இந்திய அணியை தாண்ட வேண்டும். இந்திய அணியை வீழ்த்தாமல் எந்த அணியாலும் டி20 உலக கோப்பையை வெல்ல முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆனால் அவர்களை சமாளிப்பது என்பது மிகவும் கடினமான காரியம்” என்று சமி கூறியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles