சண்டையால் பாதியில் கிளம்பிய விவகாரம்.. மன்னிப்பு கேட்டும் தடை விதித்த வெஸ்ட் இண்டீஸ்.. நடந்தது என்ன.?

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான மூன்றாம் நாள் போட்டி ஆண்டிகுவாவில் நடந்தது. இப்போட்டியின் போது, வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப்புக்கும் மற்றும் கேப்டன் ஷாய் ஹோப்புடனும் கடுமையான வாக்குவாதம் நடந்தது.

- Advertisement -

இக்கருத்து வேறுபாட்டின் காரணமாக அல்ஸாரி ஜோசப், போட்டியின் நான்காவது ஓவரிலே யாருடைய அனுமதியின்றி மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் போட்டியின் ஐந்தாவது ஓவரில் வெறும் 10 வீரர்களைக் கொண்டு விளையாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. ஆறாவது ஓவரில் அல்ஸாரி ஜோசப் மீண்டும் அணிக்கு திரும்பினார்.

- Advertisement -

அல்ஸாரி ஜோசப், மைதானத்திலிருந்து யாருடைய அனுமதி இன்றியும், ஜோசப் வெளியேறியதற்காக இரண்டு போட்டிகள் விலக்கு விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இது தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் தலைமை பயிற்சியாளர் போட்டிக்குப் பிறகு டாக்‌ஸ்போர்ட்டுக்கு கொடுத்த பேட்டியில் அவர் கூறியதாவது, “எனது கிரிக்கெட் அணியில் இப்படி ஒரு நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று கூறினார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஜோசப் தனது தவறை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார், “என் உணர்வுகளை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை, அதனால் பெரிய தவறு நடந்து விட்டது” என்று கூறினார்.

- Advertisement -

பெரிய தவறு நடந்து விட்டது என்னை மன்னித்து விடுங்கள்:

ஜோசப், CWI அறிக்கை ஒன்றில் கூறியதாவது, “ எனது உணர்வுகளை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை, அதனால் மிகப் பெரிய தவறு நடந்து விட்டது. இதற்காக நான் கேப்டன் சாய் ஹாஷிப்பிடமும், எனது அணியினரிடமும் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகத்திடமும், தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுள்ளேன். மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த மன்னிப்புகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்”

“ஒரு சிறிய தவறு கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொண்டு, அதனால் ஏற்பட்ட அனைத்து ஏமாற்றங்களுக்கும் மனம் வருந்துகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்:

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் மைல்ஸ் பாஸ்காம்பே இந்த கருத்தை வலியுறுத்தினார், இத்தகைய நடத்தையை பொருட்படுத்தாமல் விட முடியாது என்றும், சூழ்நிலையின் தீவிரத்தை தீர்க்க தீர்க்கமான நடவடிக்கை தேவை என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது, “அல்ஜாரியின் நடத்தை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கடைப்பிடிக்கும் அடிப்படை கொள்கைகளுக்கு பொருந்தாது, அத்தகைய நடத்தையை பொருட்படுத்தாமல் விட முடியாது, சூழ்நிலையின் தீவிரத்தை முழுமையாக உணர்த்தும் வகையில் நாங்கள் தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளோம்,” என்று பாஸ்காம்பே கூறினார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் வென்றுள்ள நிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் உட்பட வரவிருக்கும் சவால்களுக்கு அவர்கள் தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles