வருகின்ற டிசம்பர் மாதம் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் சீரியஸ் நடக்கிறது. அதில் ரிஷப் பண்ட்டின் அணுகுமுறை பற்றி விவரமாக பேசியுள்ளார் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ்.
கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி இல்லாத போதும் இந்திய அணி வரலாற்று சாதனைப் படைத்து கோப்பையை வென்றது. அதை எவராலேனும் மறக்க முடியுமா. கடைசிப் போட்டியில் கில், பண்ட் அதிரடியாக ஆடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
ஐந்து நாட்கள் ஆடும் டெஸ்ட் போட்டியில் கூட அதிரடியாக விளையாடக் கூடிய வீரர்கள் முன்னர் இருந்தனர், இப்போதும் உள்ளார்கள். வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ், இலங்கையின் ஜெயசூர்யா, ஷேவாக், மிஸ்பா உல் ஹேக், பிரண்டன் மெக்கல்லம் ஆகியோர் டெஸ்ட்டில் கூட டி20ஐ, ஒருநாள் போட்டி போல அதிரடியாக ஆடுவார்கள். பயிற்சியாளராக பொறுப்பேற்றப் பின் அவரின் வழியில் இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடுகிறது. இதற்கு பேஸ்பால் என பெயரிடப்பட்டுள்ளது.
நடப்பு இந்திய அணியில் அதிரடியாக ஆடக் கூடிய வீரர் என்றால் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தான். மேலும் வித்தியாசமான ஷாட்களும் வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவிலும் இதே போல இரண்டு வீரர்கள் இருப்பாதாகவும், பண்ட்டை சமாலிப்பதைப் பற்றியும் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, ” எல்லா அணியிலும் அதிரடியான வீரர்கள் உள்ளனர். அந்தப் பிரிவில் எங்கள் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் இருக்கிறார்கள். பந்துவீச்சாளர்கள் சற்று தடுமாறி தவறு செய்தால் அதைச் சரியாக பயன்படுத்தி அதிரடி காட்டுவார்கள். மேலும் ரிஷப் பண்ட் போலவே வித்தியாசமான ஷாட்களும் இவர்கள் ஆடக் கூடியவர்கள். “
” வித்தியாசமான ஷாட்கள் நடப்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமாகிவிட்டது. இதனை துவங்கி வைத்தது பண்ட் தான். வருகின்ற டெஸ்ட் தொடரில் அவரை நாங்கள் அடக்கி வைக்க வேண்டும். அதற்கான பிளான் உள்ளது. ” என ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

