நடப்பு 2026 டி20 உலக கோப்பை தொடரில் எந்த வீரர்கள் அதிக விக்கெட் மற்றும் ரன் எடுப்பார்கள் எனவும், எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும், எந்த இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறித்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் பர்னல் கணிப்பு கூறியிருக்கிறார்.
முதலில் அவர் இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் ஆக வருவார் என்று தெரிவித்திருக்கிறார். அதே சமயத்தில் அதிக விக்கெட் எடுக்கக்கூடிய பந்துவீச்சாளராக இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இருப்பார் என்று கூறியிருக்கிறார். அவர் அபிஷேக் ஷர்மா மற்றும் பும்ராவை தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு டி20 உலக சாம்பியன் இந்திய அணி அரையிறுதிக்கு வந்துவிடும் என்றும், மேலும் தங்களுடைய தென் ஆப்பிரிக்க அணியும் வந்துவிடும் என்றும் கூறியிருக்கிறார். இத்துடன் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும் அரையிறுதியில் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் கடந்த முறை போலவே இந்தியாவும் தென்ஆப்பிரிக்காவும் இறுதிப் போட்டிக்கு வரும் என்றும் சொல்லியிருக்கிறார்.

