வேண்டுமென்றே நடுவரை மோதித் தள்ளிய பெங்களூர் வீரருக்கு தடை.. மாற்று வீரரை அறிவிக்குமா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.. !

ஆஸ்திரேலிய டி20 தொடரான பிக் பாஷ் லீகின் 13வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் சீசனில் சிட்னி சிக்சர்ஸ் அணியின் அடுத்த நான்கு போட்டிகளில் இருந்து இங்கிலாந்து மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆல்ரவுண்டர் டாம் கர்ரன் அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

நடுவரை அவதூறு படுத்தும் வகையில் டாம் கர்ரன் செயல்பட்டதால் அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொஞ்சம் கூட மரிதையே இல்லாமல் நடந்துக் கொண்டதற்கு கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் வலைதளங்களிலும் மக்கள் இவருக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

டிசம்பர் 11ஆம் தேதி ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன் பயிற்சி செய்யும் போது, டாம் கர்ரன் போட்டிக்கான பிட்ச்சில் பவுலிங் ரன் அப்பை செய்துக் கொண்டிருப்பதை நடுவர் கவனித்தார். உடனே அவரை இந்தப் ஓட வேண்டாம் என அறிவுறுத்தினார்.

- Advertisement -

ஆனால் அதனை டாம் கர்ரன் சற்றும் பொருட்படுத்தாததால் அவர் ஒடும் பாதையை நடுவர் மடக்கி நின்றார். வேண்டுமென்றே நடுவர் நிற்கும் அதே பாதையில் அவரை நோக்கி வேகமாக இடிக்கும் நோக்கில் ஓடி வந்து திரும்பினார். இச்செயலுக்கு 3வது நிலை குற்றப்பிரிவில் நடுவரை மிரட்டியதாக அவருக்கு தடை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலுக்கு முன் நடுவே ஓட வேண்டாம் என சொன்ன பிறகு டாம் கர்ரனுக்கும் அவருக்கு இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தீவிர விசாரணையில் இருந்த கமிஷனர் இன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

சிட்னி சிக்கர்ஸ் அணி நிர்வாகம், டாம் கர்ரன் வேண்டுமென்றே செய்யவில்லை நடுவரின் வார்த்தைகள் அவரது காதில் விழவில்லை என மேல் முறையீடு செய்தது. மேலும் இந்த சூழ்நிலையில் அவருக்கு ஒத்துழைப்பாக உள்ளதாகவும் விரைவில் அணிக்கு திரும்புவதை எதிர்பார்த்து கொண்டிருப்பதாகவும் கூறினர்.

சிலர் டாம் கர்ரன் அடுத்த ஒரு ஆண்டுக்கு கிரிக்கட்டிகளில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். அப்படியானால் அவரை ஏலத்தில் எடுத்த பெங்களூர் அணி மாற்று வீரரை நாடிச் செல்ல வேண்டியிருக்கும். ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் வெவ்வேறு வேகப்பந்து வீச்சாளர்களை குறிப்பிட்டு எடுக்குமாறு கேட்டு வருகிறார்கள். என்ன நடக்கப் போகிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles