இதோ இங்கே ஒரு ஃபீல்டரை நிற்க வையுங்கள்.. வங்கதேச அணிக்காக கேப்டன்சி பார்த்து நகைச்சுவை செய்த‌ பண்ட்.. குலுங்கி குலுங்கி சிரித்த வர்னையாகர்கள்

ரிஷப் பண்ட் களத்தில் கிரிக்கெட்டை மட்டும் ஆடுவதைத் தாண்டி சில நகைச்சுவைத் தனமான நிகழ்வுகளிலும் ஈடுபடுவார். கீப்பிங்க்குப் பின்னால் அவர் செய்த சேட்டைகள் பல. இன்று அதே போலா பேட்டிங் செய்யும் போது அவர் செய்த செயலால் வர்னையாளர்களே குலுங்கி குலுங்கி சிரித்தனர்.

- Advertisement -

சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – வங்கதேசம் இடையே நடந்துக் கொண்டிருக்கும் முதல் டெஸ்ட்டில் இன்று மூன்றாவது நாள். முதல் இன்னிங்சில் அஷ்வின் அதிரடி சதம், ஜடேஜா அரை சதம் என இந்தியா 376 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 149 ரன்களுக்குச் சுருண்டது.

- Advertisement -

ஃபாலோ ஆன் தராமல் நேற்றே இந்திய அணி மீண்டும் பேட்டிங்க்கு வந்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் ரோஹித், கோஹ்லி ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்ற இந்தியா 80/3 என நாளை நிறைவு செய்தது. தொடர்ந்து மூன்றாவது நாளான இன்றி களத்தில் ஷுப்மன் கில் & பண்ட் நிலையாக நின்று ஆடினர்.

- Advertisement -

அப்போது தான் கலகலப்பான ஒரு நிகழ்வில் ரிஷப் பண்ட் ஈடுபட்டார். இருவரும் அதிரடியாக ஆடி பவுண்டிரியும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டனர். உடனே அதற்கு ஏற்றவாரு பீல்டிங்கை மாற்றத் துவங்கினார் வங்கதேச கேப்டன் ஷன்டோ. அப்போது இடையில் புகுந்து பண்ட், ” இங்கே பாருங்கள் கேப்டன். இந்த இடத்தில் ஒரு ஃபீல்டரை நிற்க வைக்க வேண்டும். இதே கவனியுங்கள். ” எனக் கூறினார்.

இதனைப் பார்த்த கிரிக்கெட் வர்னையாளர்கள் உடனே சத்தமாக சிரித்தனர். உடனே கேப்டன்‌‌ ஷன்டோவும் ரிஷப் பண்ட் சொன்ன இடத்தில் ஒரு வீரரை நிற்க வைத்தார். எதிரணி செய்ய வேண்டிய ஃபீல்டிங்கை இவர் செய்கிறார் பாருங்கள் என இன்னுமும் சிரித்தனர். இந்த நகைச்சுவையான தருணம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

- Advertisement -

சிறப்பாக பேட்டிங் ஆடிய பண்ட் சதம் விளாசி தன் கம்பேக்கை பலமாக அறிவித்துள்ளார். கார் விபத்தில் இருந்து உயிர் தப்பித்து ஒன்றரை ஆண்டுக்குப் பின் டெஸ்ட்க்குத் திரும்பியுள்ள பண்ட், விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்துள்ளார். மறுபக்கம் ஃபார்ம் அவுட்டில் இருந்த கில்லும் சதம் விளாசி அசத்தியுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles