யார் இந்த சமீர்‌ ரிஸ்வி.. 8.4 கோடிக்கு வாங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்.. வலது கை சுரேஷ் ரெய்னா போல தாறுமாறாக அடிக்கும் வீடியோ வைரல்

2024 ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் இன்று துபாயில் பரபரப்பாக நடந்து கொண்டு வருகிறது. மாலை வரை வெளிநாட்டு வீரர்களை பெரிய பெரிய தொகைகளுக்கு வரிந்துக் கட்டிக்கொண்டு எடுத்தனர். சென்னை அணி இதுவரை வெளிநாட்டு வீரர்கள் என இரு நியூசிலாந்து வீரர்கள் ரச்சின் ரவிந்திரா மற்றும் டாரில் மிட்செலை எடுத்தது. இதனுடன் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷார்துல் தாக்கூர் மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

இளம் இந்திய வீரர்கள் பிரிவில் ஒரு குறிப்பிட்ட வீரருக்கு தயங்காமல் கையை உயர்த்திக் கொண்டே இருந்தது சென்னை. அவர் தான் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமீர் ரிஸ்வி. அடிப்படை விலை 20 லட்சம் கொண்ட இவர் துவக்கம் முதல் 8.4 கோடி வரை சென்னை அணியால் போராடி எடுக்கபட்டார். இந்த வீரரை எடுக்க சென்னையுடன் போட்டிப் போட்டுக் கொண்டிருந்த மற்றொரு அணி குஜராத் டைட்டன்ஸ்.

- Advertisement -

இவர் யாரென்றே தெரியவில்லை என பல சென்னை ரசிகர்கள் குறிப்பிட்டு கேட்டனர். பின்னர் அவரின் பேட்டிங் வீடியோவைப் பார்த்து வாயைப் பிளந்தனர். வலது கை ரெய்னா என அழைக்கப்படும் இவர் ஸ்டேடியத்தின் நாலப் பக்கமும் டமால் டுமீல் என தாறுமாறாக சிக்ஸர்களை விளாசுகிறார். சமூக வலைத்தளத்தில் இவரின் பேட்டிங் வீடியோ தான் வைரலாகி வருகிறது. ஆண்டை சென்னை சூப்பர் கிங்ஸ் இவ்வளவு விடாப்பிடியாக ஒரு வீரர் மேல் கவனம் செலுத்துகிறார்கள் என்றால் காரணம் இல்லாமல் இருக்காது.

- Advertisement -

இந்த இளம் அதிரடி வீரர் சமீர் ரிஸ்வி உத்திர பிரதேச டி20 தொடரில் 10 இன்னிங்ஸில் 455 ரன்கள் குவித்துள்ளார். அதில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 189 ஆகும். பின்னர் சையத் முஸ்தக் அலி தொடரில் 7 இன்னிங்சில் 140 ஸ்ட்ரைக் ரேட்டில் 277 ரன்கள். மேலும் யு – 23 ஒருநாள் தொடரில் வெறும் 6 போட்டிகளில் 37 சிக்ஸர்கள் அடித்து நொறுக்கியேள்ளார்.

இவரை எடுக்க முக்கியக் காரணம் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடக்கூடிய வீரர் என்பதால் தான். ராயுடு இடத்தில் அதிரடி காட்ட இவர் சரியான தேர்வாக இருப்பார். அவரைப் போலவே இம்பாக்ட் வீரராக களமிறங்கி டெத் ஓவர்களில் பட்டையக் கிளப்ப வாய்ப்புண்டு. ஏலத்திற்கு முன்பாகவே இவரைப் பற்றி கிரிக்கெட் வல்லுனர்கள் மிகவும் உயர்த்திப் பேசியுள்ளனர்.

- Advertisement -

“ என்னிடம் ஒரு கிரிக்கெட் ஸ்கவுட் இவர் வலது கை சுரேஷ் ரெய்னா என்றார். ரெய்னாவைப் போலவே நேரான பேட்டில் ஸ்பின்னர்களை சரியான இடங்களில் தாக்குகிறார். ” எனச் சொன்னார் அபினவ் முகுந்த். மேலும் ஆர்.பி.சிங் மற்றும் ஆகாஷ் சோப்ரா இவரை சிறந்த பினிஷராக கூறினர். லக்னோ அணியில் பினிஷிங் ரோலை ஆட சரியான வீரராக இருப்பார் என்பதால் ரிஸ்வியை எடுக்க அவர்கள் முயற்சிப்பார்கள் என கணித்தனர். ஆனால் சென்னை அணி ஒரே நோக்காக இவரைக் கைப்பற்றியுளக.

நேற்று டிவிட்டரில் டாப் 10 இளம் இந்திய வீரர்கள் பட்டியலில் இவர் 3வது இடத்தில் இருந்தார் மற்றும் அஷ்வின் யூட்டியூப் சேனலில் இவர் குறைந்தது 3 முதல் 4 கோடிகளுக்கு விலை போக வாய்ப்புண்டு எனவும் பேசினர். அனைவரின் கணிப்புப் படி நல்ல தொகைக்கு பெரிய அணியில் சேர்ந்துள்ளார். சென்னை அணிக்கு அடுத்த ரெய்னாவாக ராயுடுவாக இவர் செயல்பட்டால் அலப்பரப் கிலப்பலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles