வீடியோ : வேண்டா வெறுப்பாக விளையாடி விக்கெட்டை இழந்த ஹர்மன்ப்ரீத் கவுர்.. வித்தியாசமான ரன் அவுட்

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 தொடர் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணி வென்றது. சொந்த மண்ணில் தொடரை இழந்தது இந்தியாவுக்கு சற்று பின்னடைவு.

- Advertisement -

அடுத்ததாக ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக் கொண்ட தொடர் இன்று நவி மும்பை ஸ்டேடியத்தில் துவங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய மகளிர் அணி வலுவான நிலையில் நாளை நிறைவு செய்துள்ளது. 94 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 410 ரன்கள் குவித்துள்ளது.

- Advertisement -

இன்று நடந்த ஆட்டத்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மோசமான நிலையில் ரன் அவுட் ஆகி அரை சதத்தை இழந்து ஏமாற்றத்தை அளித்தார். ரன் ஓட எண்ணி பின்னர் மெல்ல கிரீசுக்கு திரும்பிய ஹர்மன்ப்ரீத் தன் பேட்டை முழுமையாக கிரீசுக்குள் வைக்காமல் ஏதோ வேண்டா வெறுப்பாக நீட்டியது போல் இருந்தது. நேரலையில் இது ரன் அவுட் போலவே தெரியவில்லை.

- Advertisement -

இங்கிலாந்து அணி இதற்கு அப்பீல் கேட்க மூன்றாவது நடுவர் மெல்ல பார்த்து அவுட் வழங்கினார். டேரக்ட் ஹிட் என்பதால் எதிர்பார்க்காத வகையில் ரன் அவுட் நிகழ்ந்துவிட்டது. இதற்கு ஹர்மன்ப்ரீத் கவுரின் கவனக் குறைவும் முக்கியக் காரணம். இது போன்ற ரன் அவுட் அவருக்கு புதிதல்ல.

மிகவும் முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இதே போல் வேண்டா வெறுப்பாக ஓடி முக்கிய கட்டத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். இனிமேலாவது அவர் கவனத்துடன் போட்டியை அணுகுவது அவசியம். குறிப்பாக கேப்டன் பதவியில் இருக்கும் அவருக்கு இது மிகவும் முக்கியம்.

- Advertisement -

இந்திய அணியைப் பொறுத்தவரை அறிமுக வீராங்கனை சுபா சதீஷ் 69 ரன்கள், ஜெமிமா 68 ரன்கள், ஹர்மன்ப்ரீத் 49 ரன்கள், யாஷ்திகா பாட்டியா 66 ரன்கள் மற்றும் தீப்தி ஷர்மா 60 * ரன்கள் சேர்த்து இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்ட வழுவகுதுள்ளனர். இன்னும் தீப்தி சர்மா களத்தில் இருப்பதால் குறைந்தது 450 ரன்களாவது எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles