நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் ரன்கள் எடுக்க முடியாமல் தொடர்ந்து நான்கு போட்டிகளாக தடுமாறி வருகிறார். அவர் பழைய முறையில் ரன்கள் எடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியிருக்கிறார்.
தற்போது சிஎஸ்கே அணிக்கு ஓபனிங் மிகவும் சிக்கலாக மாறியிருக்கிறது. கடந்த மூன்று போட்டிகளாக ரன் எடுக்காத சஞ்சு சாம்சன் கடந்த போட்டியில் டெல்லிக்கு எதிராக சதம் அடித்து திரும்பி வந்து விட்டார். ஆனால் ருதுராஜ் கடந்த போட்டியிலும் ரன் எடுக்காமல் சிக்கிக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து வாசிம் ஜாபர் பேசும்போது “ருதுராஜ் ஒவ்வொரு போட்டியிலும் பெரிய ரன்கள் எடுக்க வேண்டும் என்று விரும்பக்கூடிய வீரர். ஒரு தொடக்க ஆட்டக்காரராக சிறந்த தொடக்கத்தை கொடுப்பதை பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே பெரிய ரன்கள் எடுப்பதை பற்றி யோசிக்க கூடாது. அவரை அதிரடியாக ஆட சொன்னால் அதற்கு அவர் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டி வரும்”
“விராட் கோலி ஆரம்பத்தில் பெரிய ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் தற்போது தாக்கத்தை கொடுக்கும் வகையில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறார். இப்பொழுது சிஎஸ்கே கேப்டனும் தாக்கத்தை கொடுப்பதற்கு விளையாட யோசிக்க வேண்டும்” என கூறியிருக்கிறார்.

