காரணம் கூறி இனி தப்பிக்க முடியாது.. எல்லாமே அவங்களுக்கு சரியா அமைஞ்சிருக்கு.. வாசிம் அக்ரம் பேட்டி

இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் புயல் இப்போது அடித்து ஓய்ந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் டி20 உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ரோகித் சர்மா தலைமையிலான ஒரு குழு உலக கோப்பைக்கு தகுந்தவாறு தயாராக அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளது.

- Advertisement -

இதனால் டி20 உலக கோப்பைக்கு தயாராக இந்திய அணிக்கு போதிய அவகாசம் இருக்கும் நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாஸிம் அக்ரம் இது குறித்து ஒரு முக்கிய தகவலை கூறி இருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத அணிகளில் டி20 உலக கோப்பை இடம் பெற்று இருக்கும் வீரர்கள் முன்னதாகவே அமெரிக்கா புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது. இதில் பெங்களூர் அணியில் விராட் கோலி மற்றும் ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் ஆகியோரை தவிர அனைத்து வீரர்களும் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர்.

- Advertisement -

விராட் கோலி சில காரணங்களால் தற்போது இந்தியாவில் இருக்கிறார். இதனால் வங்காளதேச அணியுடன் ஆன முதல் பயிற்சி போட்டியில் பங்கேற்க முடியாத சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா லண்டனில் இருப்பதால் அவரும் விரைவில் இந்திய அணியுடன் இணைய உள்ளார்.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் கால நேர மாற்றங்கள் இந்திய சூழ்நிலைக்கு அப்படியே நேர் எதிர் கொண்டதால் அங்கு இந்திய அணி உடனடியாக தங்களை மாற்றிக் கொள்வதில் கடினமாக இருக்கும். இதனால் சூழ்நிலைகளை உள்வாங்கிக் கொண்டு அந்த சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

- Advertisement -

இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறும் பொழுது
“இந்திய அணியினர் உலகக் கோப்பை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே அமெரிக்கா வந்து உள்ளதால் இனி அவர்கள் களைப்பை ஒரு காரணமாக கூற முடியாது. இறுதியாக யோசித்தால் இந்தியாவுக்காக வீரர்கள் விளையாடுவதற்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார்கள் என்பது வரவேற்கத்தக்கது. இது இந்தியாவிற்கு ஆசீர்வாதமாக அமையும்.

இதையும் படிங்க:விராட் கோலி விமர்சனங்களால் உருவாகிறார்.. அதுவே அவரை சாதிக்க தூண்டுகிறது.. ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் பேட்டி

இந்திய வீரர்கள் களைப்படைவார்கள் என்று நினைத்து வருத்தப்பட்டேன். நாங்கள் இது குறித்து முன்னரே பேசி இருக்கிறோம். மேலும் முதல் போட்டியில் இந்தியா டல்லாஸ் மைதானத்தில் விளையாட உள்ளதால் அங்கு அவர்களுக்கு அமெரிக்க சூழ்நிலை கூட இருக்காது. பயிற்சியில் ஒரு சில போட்டிகள் அங்கே இருப்பதால் அதற்கு தகுந்தவாறு இந்திய வீரர்களும் மாறி கொள்வார்கள்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles