சனிக்கிழமையன்று மெல்போர்னில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியின் நான்காவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் எடுத்த நிதிஷ் குமார் ரெட்டியை இந்திய ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் பாராட்டி உள்ளார்.
நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து 127 ரன்கள் குவித்து இந்தியாவை தோல்வியில் இருந்து மீட்க உதவினார். அவர்களின் முயற்சிகளும் இந்தியாவை ஃபாலோ-ஆன் தவிர்க்க உதவியது. அதனால் அவர்களின் கொண்டாட்டங்களும் கோமாளித்தனங்கள் கலந்த மகிழ்ச்சியின் தருணங்களாக இருந்தன.
3 ஆம் நாள் முடிவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுந்தர், அவர்களின் பொறுப்புகளையும் மற்றும் கோமாளித்தனமான கொண்டாட்டங்களை குறித்து பேசியுள்ளார்.
அவர்கள் இருவர்தான் எங்களுக்கு நினைவூட்டி கொண்டே இருந்தார்கள்:
வாஷிங்டன் சுந்தர், “நான் அன்றைய நாளுக்கான அணியின் தேவைகளைக் கருத்தில் கொண்டே எனது பணியை செய்யத் திருப்பினேன். அதுதான் எனக்கு நிறைய தெளிவைத் தந்தது மற்றும் நான் என்ன செய்கிறேன் என்பதைப் பற்றி மனதில் உறுதியாக இருக்கவும் உதவியது, ஏனென்றால் அன்றைய நாளின் அணியின் தேவைகள் குறித்து நாங்கள் மிகவும் தெளிவாகவே அறிந்திருந்தோம்.
நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், பயிற்சியாளர் மற்றும் கேப்டனும் எங்களின் பொறுப்பைப் பற்றி தொடர்ந்து நினைவூட்டி கொண்டே இருந்தார்கள். அவர்கள் அளித்த யோசனையில், எங்களுக்கு என்ன தேவை என்பதை நாங்கள் உறுதியாக அறிந்தோம். விளையாட்டின் சில கட்டங்களில் ரன்கள் வராவிட்டாலும், எந்தக் கட்டத்திலும் ரன்கள் வரலாம். ஆனால் பார்ட்னர்ஷிப் நன்றாக இருக்க வேண்டுமானால் மிடில் ஓவர்களில் அதிக நேரம் செலவிடுவது மிக முக்கியமான விஷயம்.”
இன்னும் நிறைய தந்திரங்கள் உள்ளன:
மேலும் அவர் கொண்டாட்டங்களை பற்றி கூறியதாவது, “ஃபிளவர்ன்னு நினைச்சிங்களா ஃபயறு, என்ற புஷ்பா திரைப்பட டயலாக்கை சொல்லி அந்த திரைப்படத்தில் பிரபலமான கை அசைவுகளை வைத்து தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.
அவனிடம் இன்னும் நிறைய தந்திரங்கள் உள்ளன என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அவன் மேலும் பல நூற்றுக்களை அடிப்பான், நீங்கள் இன்னும் பல கொண்டாட்டங்களை காண்பீர்கள்,” என்று சுந்தர் கூறினார்.

