ரொம்ப எரிச்சலா இருக்கா பாகிஸ்தான் கிரிக்கெட்?. இந்திய அணி கடந்த 20 வருஷமா இப்படித்தான்.. ஆதரவாக பேசிய பாக் முன்னாள் வீரர்

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா அணி 61 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் இந்த போட்டியில் பங்கேற்க முடியாது என்று மறுத்த பாகிஸ்தான் அணி, அதற்கு பின்னர் இறுதியாக விளையாட ஒப்புக் கொண்டது.

- Advertisement -

இந்திய அணியை காட்டிலும் எந்த வகையிலும் வலுவில்லாமல் இருந்த பாகிஸ்தான் அணி பந்து வீசி முடித்து பேட்டிங் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்திய அணி இடம் சரணடைந்தது. பொதுவாக ஐசிசி தொடர்களில் மட்டும் பங்கு பெற்று வரும் இந்தியா பாகிஸ்தான் போட்டிகளில் பெரும்பாலும் இந்திய அணியின் ஆதித்தமே மேலோங்கி உள்ளது. கடந்த 20 வருடங்களில் இந்திய அணி 8 முறையும் பாகிஸ்தான் அணி ஒரே ஒரு முறையும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் முன்னால் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனிஸ் பேசும்போது “இந்த போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் பெரிய எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்று உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்தியா அணியைப் பொறுத்தவரை கடந்த 20 வருடங்களாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை எனது இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles