எழுதி வைங்க.. பாகிஸ்தான் பிரார்த்தனை பலிக்காது.. 13.2 ஓவர்ல ஜெயிக்கிறதுக்கு சரக்கு பேட்டிங்ல இல்ல – வீரேந்தர் சேவாக் கணிப்பு

இன்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் இல்லை இலங்கை நிர்ணயிக்கும் இலங்கை 13.2 ஓவரில் துரத்த வேண்டும். இதைச் செய்தால் செமி பைனலுக்கு தகுதி பெற முடியும் என்கின்ற நிலை உள்ளது.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பை தொடரின் எல்லா போட்டிகளையும் பாகிஸ்தான் இலங்கையில் விளையாடுகிறது. இலங்கையில் பெரிய மைதானங்களும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான மெதுவான ஆடுகளங்களும் உள்ளன. இங்கு 160 ரன் எடுத்தாலே பெரிய விஷயமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும் பொழுது ” முதலில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணி இங்கிலாந்து இடம் தோற்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள் அது நிறைவேறியது. ஆனால் செமி பைனலுக்கு செல்ல வேண்டும் என்கின்ற அவர்களது பிரார்த்தனை நிறைவேறாது. ஏனென்றால் அவர்கள் காலம் காலமாக பிரார்த்தனை செய்து வருகிறார்கள் ஆனால் நிறைவேறவில்லை. எனவே இது நிறைவேறாது”

- Advertisement -

“மேலும் பாகிஸ்தான் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் அவர்கள் ஒரு 160 ரன்தான் எடுப்பார்கள். எனவே இலங்கை மோசமான கிரிக்கெட் விளையாடி 100 ரன்னுக்குள் ஆல் அவுட் ஆக வேண்டும். அதே சமயத்தில் இலங்கை நிர்ணயிக்கும் இலக்கை 13.2 ஓவரில் துரத்தலாம். ஆனால் அதற்கான சரக்கு பேட்டிங்கில் பாகிஸ்தானிடம் இல்லை. எனவே பாகிஸ்தான் வெளியே போய்விடும்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles