இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு இந்த நிலை ஏற்பட்டால் கட்டாயம் கோலி டெஸ்ட் ஓய்வை விட்டு வெளியே வருவார் – கிளார்க் பேச்சு

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடவுள்ளது. இதற்கான அணி அறிவிப்புக்கு முன்னர் கேப்டன் ரோஹித் ஷர்மா ஓய்வை அறிவித்தார். அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு அறிவிக்க, ஓட்டு மொத்த கிரிக்கெட் உலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

- Advertisement -

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் கோலி எதிர்பார்த்த அளவு சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் முதல் டெஸ்ட்டில் சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 2 ஆண்டு என இன்னும் ஓர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முழுவது விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றம்.

- Advertisement -

விராட் கோலி என்னதான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா அணிக்கு இந்த நிலை வந்தால் மீண்டும் அணிக்குத் திரும்பலாம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்தார். அண்மையில் பேசிய அவர், கோலிக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீது தீவிர ஆர்வம் உள்ளதாகவும், தேர்வுக்குழு கேட்டுக்கொண்டால் அவர் மறுபரிசீலனை செய்யலாம் என்றும் கூறினார்.

- Advertisement -

இங்கிலாந்து தொடரில் கில் தலைமையிலான இந்திய அணியில் கோலி, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷமி, ரஹானே ஆகியோர் இல்லாமல் இளமையா அணியோடு களமிறங்குகிறது. கிளார்க் கூறியதாவது, ” இந்தியா 5-0 எனத் தோற்றால், ரசிகர்கள் மற்றும் தேர்வுக்குழு மீண்டும் கோலியை விளையாடச் சொல்லிக் கேட்பர். கோலிக்கும் டெஸ்ட் கிரிக்கெட் மீது அதீத விருப்பம் இருப்பதால் அவர் மறுபரிசீலனை செய்யலாம். ” எனக் கூறினார்.

கோலியின் டெஸ்ட் பயணம் முடிந்துவிடவில்லை என்றும், அவரது ஆர்வம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாகவும் கிளார்க் நம்பிக்கை தெரிவித்தார். இருப்பினும், ” கோலி மற்றும் ரோஹித் இல்லாமலும் இந்திய அணி இங்கிலாந்தில் வெற்றிபெறும் திறன் கொண்டது என அவர் நம்புகிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles