இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிராக ஒரு நாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதன் முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 120 பந்துகளை எதிர் கொண்டு 135 ரன்கள் குவித்து தனது சிறந்த பேட்டிங் திறனை நிரூபித்தார். இருப்பினும் அவர் தனது பேட்டிங் ஃபார்மை தக்க வைத்துக்கொள்ள உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தி வந்தது.
ஆனால் இதனைத் தொடர்ந்து மறுத்து வந்த விராட் கோலி லண்டணில் தனிப்பட்ட முறையில் பயிற்சி செய்ய தயார் எனவும் இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விரும்பவில்லை என்றும் கூறியதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா உள்நாட்டு போட்டிகளில் விளையாட ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள நிலையில் தற்போது விராட் கோலியும் விஜய் ஹசாரே டிராபியில் விளையாடுவதற்கு ஒப்புக்கொண்டு விட்டார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
இதனால் விராட் கோலி 15 ஆண்டுகள் கழித்து விஜய் ஹசாரே தொடரில் விளையாட இருக்கிறார். இதற்கு முன்பு விராட் கோலி 2010ஆம் ஆண்டு சர்வீசஸ் அணிக்காக விளையாடிய நிலையில் மீண்டும் 15 ஆண்டுகள் கழித்து உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறார். இந்த தொடரானது வருகிற 24-ஆம் தேதி ஆந்திர அணிக்கு எதிராகவும் வருகிற 26 ஆம் தேதி குஜராத் அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளார். இந்த போட்டிகள் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இது தற்போது கர்நாடக ஆர்சிபி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

