ஏங்க இப்படி பண்றீங்க.. ரோஹித் சர்மா இதை எப்படி விரும்புவார்.. போட்டிக்கு பின் ரசிகர்களை நொந்து கொண்ட விராட் கோலி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்திய அணி இந்த போட்டியில் திரில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் போட்டிக்கு பின்னர் பேசிய விராட் கோலி ரசிகர்கள் செய்ததை ரோகித் சர்மா பெரிதாக விரும்பி இருக்க மாட்டார் என்கிற கோணத்தில் அவர் சில விஷயங்களை பேசினார்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கம் ஓரளவு நன்றாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 29 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்து வெளியேறிய போது விராட் கோலி உள்ளே வரவும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆர்ப்பரிக்க துவங்கினார்கள்.

- Advertisement -

இந்த நிகழ்வு குறித்து விராட் கோலி கூறும் போது “ஒருவர் அவுட் ஆகி வெளியே செல்லும்போது களத்திற்குள் வரும் எனக்கு அதிக ஆர்ப்பரிப்பு எழுவது பிடிக்கவில்லை. இதே விஷயம் அடிக்கடி தோனிக்கும் நடக்கிறது. ரசிகர்களின் உற்சாகத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதே வேளையில் அவுட் ஆகி வெளியேறுபவர் பெரிதாக விரும்ப மாட்டார்” என்று விராட் கோலி பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles