அதை நினைத்தால் அழுத்தம்தான் ஏற்படும்.. நமக்கு பின்னால் ரசிகர்கள் இருக்கிறார்கள்.. டி20 உலக கோப்பை குறித்து விராட் கோலி கருத்து

இந்திய அணி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள நிலையில் இந்திய ரசிகர்கள் குறித்தும் எதிர்பார்ப்பு குறித்தும் அதிகமாக சிந்தித்தால் நிச்சயம் அழுத்தம் தான் ஏற்படும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறி இருக்கிறார்.

- Advertisement -

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அனைத்து சர்வதேச அணிகளும் தற்போது அமெரிக்காவில் தஞ்சம் அடைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. வருகிற ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஆன டி20 உலக கோப்பை போட்டி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இதற்கான டிக்கெட்டுகள் தற்போது லட்சக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது அதையும் வாங்குவதற்கு ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு காத்திருக்கின்றனர் ஏனெனில் அமெரிக்காவில் இந்திய ரசிகர்கள் அதிகம் இருப்பதால் எவ்வளவு விலை கொடுத்தேனும் இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண வேண்டும் என்று அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணிக்கான ஆதரவு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்திய அணி 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை வெள்ளாவிட்டாலும் இந்திய ரசிகர்களின் ஆதரவு பெருகிக்கொண்டே வருகிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. இதுகுறித்து இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி நான் இந்திய அரசியலின் ஆதரவை ஒருபோதும் அழுத்தம் என்று கூறமாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து விராட் கோலி விரிவாக கூறும்பொழுது
” ஏனென்றால் ரசிகர்களிடம் சென்று வெற்றியை எதிர்பார்க்காதீர்கள் என்று சொல்ல முடியாது. நமது நாட்டைப் பொறுத்தவரை கிரிக்கெட் மீதான பார்வை முற்றிலும் வேறு மாதிரியாக உள்ளது அதுதான் தற்போது நமது பலமாகவும் இருக்கிறது. நமது அதீத கவனத்தை ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேல் வைக்கும் போது அது நம்முடைய பலவீனமாக மாறிவிடும்.

- Advertisement -

ஆனால் இந்திய அணியினர் அதனை பாசிட்டிவாகப் பார்த்து வெற்றிக்கான ஊக்கமாக கொள்ள வேண்டும் இந்திய ரசிகர்கள் அனைவரும் நாம் பின்னால் நிற்கிறார்கள் என்று நினைத்து விளையாட வேண்டும். இதை ஒருபோதும் அழுத்தமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் நமது வெற்றிக்குப் பின்னால் ஏராளமான ரசிகர்கள் நமக்கு ஆதரவாக நிற்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:நான் பேட்டிங் செய்ய வர்றப்போ.. இவங்க மூணு பேரும் எனக்கு எதிரா இதைத்தான் பண்ணுவாங்க.. தினேஷ் கார்த்திக் பேட்டி

தற்போது அமெரிக்கா கிளம்பியுள்ள விராட் கோலி சில தினங்களில் இந்திய அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் நிச்சயமாக இந்த டி20 உலக கோப்பையை கைப்பற்றும் என்பதை அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles