நான் ஓய்வு பெறுகிறேனா.. லார்ட்ஸ் மைதானத்தில் பயிற்சியை தொடங்கிய கிங் விராட் கோலி.. கிங் கொடுத்த மரண கம்பேக்!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான விராட் கோலி மே மாதத்தோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையுடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்திருந்தார். இதனால் இனி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விராட் கோலி விளையாடுவார் என்று கூறப்பட்டது.

- Advertisement -

விராட் கோலி ஓய்வு?

36 வயதாகும் விராட் கோலி, 2027ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடக்கும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க விரும்புவதாக கூறப்பட்டது. ஆனால் விராட் கோலியின் இடத்தை நிரப்ப ஏராளமான இளம் வீரர்கள் தயாராகிவிட்டனர். டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே விராட் கோலியின் இடம் மிக விரைவாக பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. 

- Advertisement -

இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தி வருவதாக சில தகவல் வெளியாகியது. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட உள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடருடன் விராட் கோலிக்கு ஃபேர்வெல் கொடுக்க பிசிசிஐ தயாராகி வருவதாக சில செய்திகள் வெளியாகின. இதனால் விராட் கோலி ரசிகர்கள் சோகம் அடைந்தனர்.

- Advertisement -

லார்ட்ஸ் மைதானத்தில் பயிற்சி

இந்த நிலையில் லண்டனில் குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வரும் விராட் கோலி, இன்று லார்ட்ஸ் மைதானத்திற்கு வந்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பயிற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. விராட் கோலியை கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இதன் மூலமாக விராட் கோலி ஓய்வு பெறும் எண்ணத்தில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. 

சில நாட்களுக்கு முன்பாக விராட் கோலியின் தாடி முழுக்க நரைத்திருந்த சூழலில், அவரின் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி இருந்தனர். தற்போது விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் மரண மாஸ் கம்பேக் கொடுக்க தயாராகி வருவது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வரும் நாட்களில் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles