கொடுமையின் உச்சம்! சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு கோலி, ரோகித்துக்கு விடுமுறை தரும் பிசிசிஐ! பார்ம் அவுட்டான வீரர்களுக்கு லீவு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி அழகாக தகுதி பெற்றிருக்க வேண்டியது. ஆனால் தற்போது இந்தியா அந்த பைனல் வாய்ப்பில் இருந்து வெளியேறும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் ஸ்டார் வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தான்.

- Advertisement -

கடைசியாக நடைபெற்ற நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடரிலும் விராட் கோலி ரோஹித் சர்மா ஆகியோர் கடுமையாக தடுமாறி வருகின்றனர். இதனால் இந்திய அணி கடந்த ஏழு டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு டிரா மட்டும் கண்டு மற்ற அனைத்திலும் தோல்வியை தழுவி இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழலில் வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் முடிவடைந்த உடன் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தயாரிப்பு பணிகள் தொடங்கி விடும். இந்தத் தொடருக்கு முன்பு இந்திய அணி வெறும் மூன்றே மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் தான் விளையாடுகிறது.

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான இந்த ஒரு நாள் தொடர் பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்குகிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கும் நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்கள் இந்த ஒரு நாள் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கையில், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உடல் அளவில் தோய்வு ஏற்பட்டு இருப்பதால் அவர்களுக்கு ஓய்வு வழங்க முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

- Advertisement -

இதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ராவும் டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. பும்ராவுக்கு ஓய்வு வழங்கியிருப்பதில் 100% நியாயம் இருக்கின்றது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மாவும்,விராட் கோலி என்ன கிழித்தார்கள் என்பதற்காக ஓய்வு தரப்படுகிறது என்று ரசிகர்கள் ஆவேசமாக சமூக வலைத்தளத்தில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

ஏற்கனவே ஓய்வு எடுத்து  தான் டெஸ்ட் போட்டியிலே தடுமாறி வருவதாக குறிப்பிட்டுள்ள ரசிகர்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் ரஞ்சிப் போட்டியில் இந்த இரண்டு வீரர்களும் விளையாட பிசிசிஐ உத்தரவிட வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டி பிப்ரவரி ஆறாம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles