விஜய் ஹசாரே.. 50 ஓவர் போட்டியை 19 ஓவரில் முடித்த தமிழ்நாடு அணி.. நடராஜன் மாஸ் கம்பேக்.. பெங்கால் அணி பரிதாபம்.!

விஜய் ஹசாரே கோப்பை காண கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த 50 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் டொமஸ்டிக் கிரிக்கெட் தொடர்களில் பிரதானமான போட்டியாகும். இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாநில டிக்கெட் அணிகளும் இந்த போட்டியில் பங்கு பெற்று விளையாடி வருகின்றன.

- Advertisement -

இதில் நேற்று தமிழகம் மற்றும் மேற்குவங்க அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் களம் இறங்கிய மேற்கு வங்காளியின் ஆட்டக்காரர்கள் தமிழக பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்தனர்.

- Advertisement -

அந்த அணியின் துவக்க வீரரான அபிமன்யு ஈஸ்வரன்1 ரன்னிலும் மற்றொரு துவக்க வீரரான அபிஷேக் போரல் 14 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பெங்கால் அணி தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட் இழந்து 23.4 ஓவர்களில் 84 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் வீரர் ஷபாஷ் அஹமத் அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்திருந்தார். இவருக்கு அடுத்தபடியாக ஷக்கீர் காந்தி 19 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

பெங்கால் அணியின் 7 வீரர்கள் ஒற்றை இலக்கரங்களில் ஆட்டம் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அணியின் பந்துவீச்சில் சந்தீப் வாரியர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பாபா அபரஜித் மற்றும் நடராஜன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழக அணியின் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் சிறப்பாக செயல்பட்டு இந்தப் போட்டியில் அபாரமாக பந்து வீசினார். சாய் கிஷோர் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்

இதனைத் தொடர்ந்து 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தமிழக அணிக்கு மேற்குவங்க பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். சாய் சுதர்சன் 8 ரன்னிலும் அபரஜித் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இவர்களைத் தொடர்ந்து விஜய் சங்கர் 2 ரன்னில் அவுட் ஆனார். இதன் பிறகு பாபா இந்திரஜித் மற்றும் துவக்க வீரர் ஜெகதீசன் இருவரும் தமிழக அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

- Advertisement -

பொறுப்புடன் ஆடிக்கொண்டிருந்த ஜெகதீசன் 30 ரன்னில் அவுட் ஆனார். அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கேப்டன் தினேஷ் கார்த்திக் 3 ரன்னில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து களத்திற்கு வந்த ஷாருக்கான் இந்திரஜித் உடன் இணைந்து தமிழக அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். தமிழக அணி 19.1 ஓவரில் 85 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து வெற்றி பெற்றது.

பாபா இந்திரஜித் 10 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இவருடன் விளையாடிய ஷாருக்கான் 14 பந்துகளில் 9 ரன்கள் உடன் களத்தில் இருந்தார். பெங்கால் அணியின் பந்துவீச்சில் முகமது கைப் மற்றும் இஷாந்த் பொரள் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles