[வீடியோ] டீம்ல இடம் இல்லையா?.. 350 ஸ்ட்ரைக் ரைட்டில் பேட்டிங்கில் புவனேஸ்வர் குமார் கலக்கல்!

சர்வதேச கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட் வடிவம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கிரிக்கெட் உலகமெங்கும் பரவுகின்ற வேகம் மிக அதிகமாக இருக்கிறது. நிறைய இளைஞர்கள் கிரிக்கெட்டை தங்களுடைய முக்கியத் தொழிலாகவே எடுத்துக் கொள்ளும் அளவுக்கு தைரியம் பெற்று இருக்கிறார்கள்!

- Advertisement -

ஆரம்ப காலத்தில் இந்தியாவில் விளையாட்டை தொழிலாக எடுப்பதற்கு இளைஞர்கள் இடையே பெரிய தயக்கம் இருந்தது. விளையாட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவாகவே இருந்தது.

- Advertisement -

தற்பொழுது உலக கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட்டின் வருகையும், இந்திய கிரிக்கெட்டில் ஐபிஎல் தொடரின் வருகையும் மிகப்பெரிய மாற்றங்களை உலகெங்குமே ஏற்படுத்தி வருகின்றன. பல நாடுகள் ஐபிஎல் தொடரின் வெற்றியை பார்த்து டி20 லீக்குகளை நடத்துகின்றன.

- Advertisement -

இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் தாக்கம் இந்திய மாநில கிரிக்கெட் வாரியங்களிலும் பெரிதாக எதிரொலிக்கிறது. தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் வெற்றிகரமாக டி20 லீக்குகள் நடத்தப்பட்டன.

தற்பொழுது இது இன்னும் கொஞ்சம் விரிவடைந்து ராஜஸ்தான், பரோடா, உத்தரப்பிரதேசம் என்று பரவி இருக்கிறது. தற்பொழுது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த லீக் தொடரில் சர்வதேச மற்றும் ஐபிஎல் நட்சத்திரங்களான புவனேஸ்வர் குமார், ரிங்கு சிங் மாதிரியான பெரிய வீரர்கள் விளையாடுகிறார்கள். இந்த வருடம் துவங்கி இருக்கும் இந்த டி20 லீக் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.

நேற்று இந்த தொடரில் புவனேஷ் குமார் விளையாடும் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணியும், ரிங்கு சிங் விளையாடும் மீரட் மாவ்ரிக்ஸ் அணியும் மோதிக்கொண்ட பரபரப்பான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கடைசிக்கட்டத்தில் களம் இறங்கிய புவனேஸ்வர் குமார், 4 பந்துகளில் 14 ரன்கள் அடித்தார். இதில் இரண்டு சிக்ஸர்களும் அடக்கம். அவரது ஸ்ட்ரைக் ரேட் 350 மேல் இருந்தது. அவரது அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் சேர்த்தது. மேலும் பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டு 15 ரன்களை, நான்கு ஓவர்களுக்கு தந்து, ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இதற்கடுத்து விளையாடிய மீரட் மாவ்ரிக்ஸ் இலக்கை வெறும் 16 ஓவர்களில் எட்டி அசத்தல் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஸ்வஸ்திக் சிகாரா அதிரடியாக விளையாடி பத்து பவுண்டரி, ஆறு சிக்ஸர்கள் உடன் 108 ரன்கள் குவித்து, அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். ரிங்கு சிங் களத்தில் 23 ரன்கள் உடன் நின்றார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles