வீடியோ.. 182 ரன்.. மறைந்த தந்தைக்காக பென் ஸ்டோக்ஸ் செய்த உணர்வுபூர்வமான செயல்.. நெகிழும் கிரிக்கெட் ரசிகர்கள்.!

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நியூசிலாந்து அணி தற்போது நான்கு போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெற்றது.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 368 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது . அந்த அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மிகச் சிறப்பாக விளையாடி 124 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்களுடன் 182 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் துரதிஷ்டவசமாக கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

- Advertisement -

முன்னதாக முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் மூன்று ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்த போதும் பென் ஸ்டோக்ஸ் மற்றும் டேவிட் மலான் இருவரும் இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்டதோடு மிகப்பெரிய ரண்களை இலக்காக நிர்ணயிக்க அடித்தளமும் அமைத்துக் கொடுத்தனர்.

- Advertisement -

டேவிட் மலான் 96 ரன்களில் ஆட்டம் இழந்த போதும் மிகச் சிறப்பாக விளையாடிய பெண் ஸ்டோக்ஸ் 76 பந்துகளில் தனது நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சதத்தை பூர்த்தி செய்தார்.தனது சதத்தை நிறைவு செய்ததும் ரசிகர்களின் கரகோஷங்களை ஏற்றுக்கொண்ட பெண் ஸ்டோக்ஸ் உணர்ச்சிப் பூர்வமாக மறைந்த தனது தந்தையை நினைவு கூர்ந்தார்.

இவரது தந்தையான ஜெட் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து நாட்டின் ரக்பி விளையாட்டு வீரர். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புற்று நோயால் மரணம் அடைந்தார். ரக்பி விளையாட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜெட் ஸ்டோக்ஸ் இடது கையில் நடு விரல் அறுவை சிகிச்சையின் மூலமாக அகற்றப்பட்டிருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு பென் ஸ்டோக்ஸ் விளையாட்டின் உணர்வுபூர்வமான தருணங்களின் போது தனது தந்தையை நினைவு கூறும் விதமாகவும் விளையாட்டிற்காக அவரது தந்தையின் அர்ப்பணிப்பை கொண்டாடும் வகையிலும் தனது இடது கைகளில் நடுவிரலை மடக்கி அவரது தந்தையை நினைவு கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதேபோன்று நேற்றைய ஆட்டத்தின் போதும் சதம் எடுத்த பிறகு மறைந்த தனது தந்தையை நினைவுகூர்ந்தார் பென் ஸ்டோக்ஸ்.

முன்னதாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பென் ஸ்டோக்ஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 2023 ஆம் ஆண்டின் உலக கோப்பையில் பங்கேற்பதற்காக தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றார். மேலும் தனக்கு இன்னொரு உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்று விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்த அவர் பேட்ஸ்மேன் ஆக மட்டுமே ஆடுவேன் பந்து வீசமாட்டேன் என்ற நிபந்தனையுடன் இங்கிலாந்து அணியில் இணைந்திருப்பதாக தெரிவித்தார். இதற்கு இங்கிலாந்து அணி நிர்வாகமும் கேப்டன் ஜோஸ் பட்லரும் உடனடியாக சம்மதம் தெரிவித்ததால் ஓய்வு முடிவை திரும்ப பெற்று அணியில் இணைந்ததாகவும் கூறி இருந்தார்.பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்ததற்கு பிறகு உணர்வுபூர்வமாக தந்தையை நினைவு கொள்ளும் வீடியோ இந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles