இந்திய டி20 கிரிக்கெட் அணியை பொறுத்தவரை முதன்மை சுழற் பந்துவீச்சாளராக கருதப்படுபவர் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி. இவர் பந்து வீசும் போது ரன்களை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் விக்கட்டுகளை எடுப்பதில் சக்கரவர்த்தியாக இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் தனது வேலை குறித்து சில கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும் போது “தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் நான் விளையாடிய போது கடைசி போட்டி தான் மிகவும் சிறப்பாக இருந்தது. தனிப்பட்ட முறையில் எனது செயல்பாடு அந்த போட்டியில் மிகவும் பிடித்தமானதாக இருந்தது. மேலும் இந்த தொடர் முழுவதுமே நான் ரசித்து சிறப்பாக விளையாடியிருந்தேன் என்று நம்புகிறேன். இந்திய அணியில் என்னுடைய ரோல் என்னவென்றால் விக்கெட்டுகள் எடுப்பதுதான்.
அதனால் பந்து என் கையில் வந்தாலே விக்கட்டுகள் எடுக்க வேண்டும் என்கிற நோக்கில் பேட்ஸ்மேன்களுக்கு அட்டாக் செய்து வீசுகிறேன். உண்மையில் எனக்கு கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் கம்பீர ஆகியோரிடம் இருந்து நல்ல ஆதரவு கிடைக்கிறது. அதன் காரணமாகவே என்னால் இயல்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டுகள் வீழ்த்த முடிகிறது. இந்தத் தொடரில் நான் எவ்வாறு சிறப்பாக செயல்பட்டேனோ அதேபோல வருகிற டி20 உலக கோப்பையிலும் சிறப்பாக செயல்பட ஆர்வமாக இருக்கிறேன்” என்று அவர் பேசி இருக்கிறார்.

