என் பையன் சூரியவன்சி யார் சொன்னாலும் கேட்க மாட்டான்.. பேட்டிங்கில அவனுக்கு பயமே கிடையாது – தந்தை மகிழ்ச்சி பேச்சு

நேற்று அண்டர் 19 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வைபவ் சூரியவன்சி 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்தார். இவரது அதிரடி ஆட்டத்தின் காரணமாக இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை கோப்பையை வென்றது. இந்த நிலையில் அவருடைய தந்தை சஞ்சீவ் சூரியவன்சி தன் மகன் சிறுவயதில் இருந்து எப்படியான பேட்டி அணுகுமுறையை கொண்டிருக்கிறார் என்பது குறித்து பேட்டி அளித்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “என் மகனுக்கு சிறுவயதில் இருந்து பயம் என்பது என்னவென்றே தெரியாது. அவர் எப்பொழுதும் யாரிடமும் அச்சமற்ற அணுகுமுறையில்தான் இருப்பார். அவருடைய பேட்டிங் எப்பொழுதும் அச்சம் இல்லாமல்தான் இருக்கும். சிறுவயதிலேயே சிறப்பான பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு மிகச் சிறப்பாக விளையாடுவார். அதில் அவருக்கு எந்த சிரமமும் ஏற்பட்டதில்லை. அவருடைய இந்த அதிரடியான அணுகு முறையால் அவர் அசதியாக இருப்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது”

- Advertisement -

“வைபவ் சூரியவன்சி பேட்டிங் செய்யும்பொழுது நாங்கள் அவரிடம் ஒன்று அல்லது இரண்டு ரன்கள் எடுத்தால் கூட பரவாயில்லை என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்போம். அதற்கு அவன் ‘அப்பா நான் ஒரு பந்தை சிக்ஸர் அடிக்க முடியும்போது அந்தப் பந்தில் ஒரு ரன் எடுப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?’ என்று கேட்பான். அவனுடைய இயல்பான அணுகுமுறையே அதிரடியாக விளையாடுவதுதான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles