இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி உள்ளிட்டோருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த இந்திய வீரர் சாதிக்கிறாரோ, அவர்களை வெளிநாட்டு ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். ஆனால் இந்தியாவின் இளம் வீரர் ஒருவருக்கு மிகப்பெரிய ரசிகர்களின் பட்டாளம் இங்கிலாந்து உருவாகி வருகிறது.
மிரண்டுபோன இங்கிலாந்து
அது வேறு யாருமல்ல.. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி தான். இங்கிலாந்து யு19 அணிக்கு எதிரான தொடரில் இந்திய யு19 அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை பார்ப்பதற்காக இங்கிலாந்து ரசிகர்கள் மைதானங்களில் குவிந்து வருகின்றனர். இது இங்கிலாந்து கிரிக்கெட் அணியையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
அதற்கேற்ப 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 355 ரன்களை விளாசி தள்ளினார். அதில் மொத்தமாக 27 சிக்சர்களை விளாசி தள்ளினார். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அரைசதம் விளாசிய அவர், 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தள்ளினார். இதன் மூலமாக யு19 கிரிக்கெட்டில் மெஹதி ஹசன் சாதனையை முறியடித்துள்ளார்.
14 வயதில் இவ்வளவு திறமையா
இந்த சூழலில் இங்கிலாந்து அணியின் அனலிஸ்ட் ஆன டேனியல் பீகாக் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை பார்க்க நேரில் வந்திருக்கிறார். இதன்பின் அவர் சொல்லும் போது, கிரிக்கெட் தொடர்பாக பேசிய அனைவரிடமும், இதே உணர்வுதான் இருக்கிறது. ஒரு இளம் ஸ்டார் உருவாகி வருவதை நாங்கள் அனைவரும் கண்முன் பார்க்கிறோம்.
இதுவரை அனைத்து வகையான விளையாட்டுகளிலும் சேர்த்தால் கூட, 14 வயதில் யாரும் இப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே இல்லை. வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை பார்க்கும் போது, மக்கள் மத்தியில் ஒரு ஸ்பெஷன் செண்டிமெண்ட் உருவாகிவிட்டது. அவர்கள் அனைவரும் இப்போதே வைபவ் சூர்யவன்ஷியை டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோருடன் ஒப்பிடத் தொடங்கிவிட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

