நேற்று லக்னா அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்சி 38 பந்தில் 93 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியால் ராஜஸ்தான் எழு விக்கெட் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றது குறித்து அவர் பேசியிருக்கிறார்.
மேலும் நேற்றைய போட்டியில் அரை சதம் அடித்த பிறகு ஆங்கில எழுத்தில் ஏ போல விரல்களை வைத்து காட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். பிறகு பேட்டியில் இதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும்போது ” நான் முதலில் வெளியில் இருந்து ஆடுகளத்தை பார்த்த போது பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது. எனவே ஆரம்பத்தில் பொறுமையாக இருந்து போட்டியை எடுத்துச் சென்று முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். என்னால் எப்போது வேண்டுமானாலும் இரண்டு மூன்று பவுண்டரி சிக்ஸர்கள் அடிக்க முடியும் என்பது எனக்கு நன்றாக தெரியும்”
“நான் செய்யும் கொண்டாட்டங்களுக்கு எந்த வித அர்த்தமும் கிடையாது. ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று நினைப்பேன். நேற்று செய்ததற்கும் எந்த அர்த்தமும் கிடையாது” என்று கூறி இருக்கிறார்.

