அதிஷ்டம்னா இது தான்.. தென் ஆப்பிரிக்க கேப்டன் ஆனா அன்கேப்டு பிளேயர்.. 50 வருட வரலாறு… காரணம் என்ன?

அதிர்ஷ்டம் இருந்தால், கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிரித்து கொண்டு வந்து கொடுக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். உலகில் ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் இருந்தாலும் பலருக்கு அமைவதில்லை. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை திறமை இருந்தாலும் ஒருவருக்கு அதிர்ஷ்டமும் முக்கியமாக கருதப்படுகிறது.

- Advertisement -

முதல் தரப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பலரும், அதிர்ஷ்டம் இல்லாததால் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியாமல் காணாமல் போனவர்கள் உண்டு. ஒரு சிலருக்கு சர்வதேச போட்டியில் பங்கேற்க வாய்ப்புகளே அமைவதில்லை. இதற்குப் பல உதாரணங்கள் உண்டு.

- Advertisement -

பேட்ஸ்மன்களுக்கு கேட்ச் தவறவிடும்போதும், பேட்ஸ்மேன் அவுட் ஆனதை நடுவர்கள் நாட்அவுட் வழங்கும்போதும், பேட்ஸ்மேனுக்கு அதிர்ஷ்டமாக பார்க்கப்படும். பேட்ஸ்மேன் அவுட் இல்லாததற்கு நடுவர்கள் ஆட்டம் இழந்ததாக அறிவிக்கும் போதும் பந்துவீச்சாளர்களுக்கு அதிர்ஷ்டமாக பார்க்கப்படும்.

- Advertisement -

இதுவரை சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத சவுத் ஆப்பிரிக்காவை சேர்ந்த வீரருக்கு செமையான அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறது. சவுத் ஆப்பிரிக்காவை சேர்ந்த நீல் பிராண்ட், 2024ஆம் ஆண்டு பிப்ரவரியில் நியூசிலாந்திற்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிரித்து கொண்டு வந்து கொடுக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப, நீல் பிராண்ட்க்கு சவுத் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியின் கேப்டன் என்ற அதிர்ஷ்டத்தை அவரது கூரையை பிரித்துக் கொண்டு வந்துள்ளது.

நியூசிலாந்தின் லீ ஜெர்மன், 1995ஆம் ஆண்டு, தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில், கேப்டனாக செயல்பட்டு இந்த அரிய சாதனையை நிகழ்த்தி இருந்தார். அப்போதே இந்த வாய்ப்பு என்பது அவருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் என பலரால் பேசப்பட்டது. லீ ஜெர்மனுக்குப் பிறகு, தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் தலைமை ஏற்கும் அதிர்ஷ்டம் பெரும் இரண்டாவது வீரர் நீல் பிராண்ட்.

- Advertisement -

இடது கை பேட்ஸ்மேன் மற்றும் சுழல் பந்துவீச்சாளரான நீல் பிராண்ட்க்கு, தனது 27வது வயதில் இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, சவுத் ஆப்பிரிக்காவில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் டி20 தொடர்களில், பல முக்கிய வீரர்கள் பங்கேற்பதால், நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் போட்டிக்கான அணியில், நீல் பிராண்ட் தலைமையிலான அனுபவமற்ற 14 வீரர்களை, சவுத் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.

நீல் பிராண்ட் 51 முதல் தர போட்டிகளில் விளையாடி, 2906 ரன்களுடன் 39.27 சராசரியைக் கொண்டுள்ளார். மேலும் 72 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடும் சவுத் ஆப்பிரிக்காவில் இருந்து, கீகன் பீட்டர்சன், ஜுபைர் ஹம்சா, மற்றும் டேவிட் பெடிங்ஹாம், இந்த மூன்று வீரர்கள் மட்டுமே இந்த அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான சவுத் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில், 14 வீரர்களில் 6 வீரர்கள் புது முகமாகும்.
இந்த அணியில் இடம் பெற்றுள்ள டுவான் ஆலிவியர் மட்டுமே 15 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய அனுபவம் உள்ளவர்.

டெஸ்ட் தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் பேசுகையில், “அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களும் வாழ்த்துகிறேன். நாட்டுக்காக விளையாடுவது, உங்களுக்குப் பெருமையைத் தரும், அனைவருக்கும் இது போன்ற வாய்ப்புகள் அமைவதில்லை ஆகையால் உங்கள் முழு திறமையை வெளிப்படுத்துங்கள்” என்று தெரிவித்தார்.

மேலும், “அணியில் புதிய வீரர்கள் பலர் இடம்பெற்று இருந்தாலும், மவுண்ட் மவுங்கானுயில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிராக, சவால் அளிக்கும் வகையில், தங்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. புதிய வீரர்கள் சர்வதேச போட்டியில் தங்கள் திறமையை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்றதன் மூலம், அனுபவம் பெற்று இருப்பார்கள் என நம்புகிறேன். புதிய வீரர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த இந்த தொடர் சிறந்த வாய்ப்பாக அமையும், எங்கள் அணி சிறந்த அணி என்பதில் சந்தேகமில்லை” என்று கூறினார்.

நியூசிலாந்து அணி சவுத் ஆப்பிரிக்கா எதிரான டெஸ்ட் போட்டி தொடரை இதுவரை வென்றதில்லை என்பதால், புதிய வீரர்கள் கொண்ட சவுத் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்து சென்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதால், நியூசிலாந்து அணிக்கு டெஸ் போட்டி தொடரை வெல்ல, இது ஒரு அருமையான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles