INDvsAFG.. 37 ஓவர்.. இந்திய கிரிக்கெட் வீரரின் தம்பி அதிரடி ஆட்டம்.. U19 ஆசிய கோப்பையில் அசத்தல் வெற்றி

ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்டர் 19 ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் எட்டு அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாசை இழந்த ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

தொடக்கம் முதலே ஆப்கானிஸ்தான் அணி ரன்கள் எடுக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் வாபியுல்லா 15 ரன்களில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜம்ஷித் ஜத்ரான் சிறப்பாக விளையாடி 75 பந்துகளில் 43 ரன்களைக் குவித்தார். இதில் நான்கு பவுண்டரிகளும் அடங்கும். பின்னால் வந்த வீரர்கள் சொற்பரன்களில் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 173 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி வீரர்கள் அபாரமாக பந்துவீசினர். இந்திய அணித் தரப்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளும், அர்சின் குல்கரணி 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

- Advertisement -

பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்பரன்களில் ஆட்டம் இழக்க, இந்திய அணி 32 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் அணியின் கேப்டன் உதய் சகரன் மற்றும் அர்சின் குல்கரணி ஆகியோர் சிறப்பாக விளையாட இந்திய அணி மெல்ல உயர்ந்தது.

உதய் 20 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. பின்னர் களம் இறங்கிய முஷீர்கான், அர்சின் குல்கரணியுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார். இருவரும் 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஜோடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தது.

- Advertisement -

முஷீர்கான் 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுக்க, அர்சின் குல்கரணி 70 ரன்கள் குவித்து இருவரும் அவுட் ஆகாமல் இருந்தனர். ஆல்ரவுண்டராக ஜொலித்த அர்சின் குல்கர்னி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். தனது முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி தோல்வியுடன் ஆசிய கோப்பையைத் தொடங்கியுள்ளது. நாளை தொடங்க உள்ள ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது

இப்போட்டியில் 43 ரன்கள் குவித்த முஷீர் கான் லெப்ட் ஆர்ம் ஸ்பின்னரும் கூட. இவர் முதல் தர கிரிக்கெட் போட்டியில் அபாரமாக விளையாடி வரும் சப்ராஸ்கானின் சகோதரன் ஆவார். சர்ப்ராஸ்கான் தற்போது இந்திய ஏ அணிக்கு விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles