ஐபிஎல் 2025 ஏலம்.. 13 வயதில் கோடீஸ்வரன்.. கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்த சிறுவன்.. யார் இவர்.?

இந்தியன் பிரீமியர் லீக் ஏலமானது சவூதி அரேபியாவில், ஜெட்டாவில் நடந்து வருகிறது. ஏலத்தின் இரண்டாவது நான் இறுதியில், வரலாறு காணாத சம்பவம் ஒன்று நடந்தது.

- Advertisement -

பீகாரைச் சேர்ந்த புதிய இடது-கை பேட்ஸ்மேனாக வைபவ் சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூபாய் 1.10 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் ஐபிஎல் லில் விளையாடும் வீரர்களுள் மிகக் குறைந்த வயது உள்ள வீரராக கருதப்படுவார். மேலும் அவர், ஏற்கனவே இந்தியா U-19 பணியில் இடம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?

வைபவ் சூர்யவன்ஷி பீகார் மாநிலத்தில், மே 27, 2011 அன்று தாஜ்பூர் என்ற ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, விவசாய குடும்பத்தில் வளர்ந்து, தனது ஒன்பதாவது வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கிவிட்டார். அவர், முதல் முதலில் தனது 12 வயதில் வினூ மங்காட் கோப்பையில் அறிமுகமானார், 5 போட்டிகளைக் கொண்ட அந்த மேட்சில் 400 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

- Advertisement -

இளம் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்:

அவர் முதன் முதலில் பீகார் அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடும் போது, அவருடைய வயது வெறும் 12 வயதாகவே இருந்தது. இதன் மூலம், 1986 ஆண்டுக்குப் பிறகு ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய முதல் இளம் வீரர் மற்றும் பீகார் அணிக்காக விளையாடிய இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமையே பெற்றுள்ளார். மேலும் அவர் ஒட்டுமொத்தமாக ரஞ்சிக் கோப்பையில் விளையாடி நான்காவது இளம் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

U-19 இடம்பெற்றுள்ளார்:

அவர் சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியா அணியின் இளைஞர் டெஸ்ட் தொடரில் தனது அறிமுக கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கினார். இதன் மூலம், இந்தியா U-19 க்காக விளையாடிய இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் அவர், தனது அறிமுக போட்டியில் 64 பந்துகளில் 100 ரன்களை அடித்தார். துபாயில் நடைபெற்ற U-19, ஆசியக் கோப்பைக்கான இந்தியா அணியில் இடம்பெற்றுள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles